கொரோனா வைரஸிற்கான முற்காப்பு சிகிச்சை முறையை கண்டுபிடித்த இலங்கை வைத்தியர் குழு

Published By: Digital Desk 3

20 Feb, 2020 | 01:30 PM
image

வைத்தியர் சமீர ஆர். சமரகோன் தலைமையிலான விஞ்ஞான குழு, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக முற்காப்பு சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரி இரசாயனவியல் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (IBMBB) வைத்தியர் சமீர ஆர். சமரகோன் தலைமையிலான விஞ்ஞான குழுவினரே குறித்த முற்காப்பு சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் விஞ்ஞானக் குழு, அவற்றை கணினி அடிப்படையிலான மருந்து வடிவமைப்பு முறைகளைப் பயன்படுத்தி  கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கான நோய்த்தடுப்பு முற்காப்புசிகிச்சை முறையை கண்டுப்பிடித்துள்ளது.

வைத்தியர் சமரகோன், வைத்தியர் கனிஷ்க சேனாதிலக மற்றும் பேராசிரியர் காமனி தென்னகோன் உள்ளிட்ட விஞ்ஞான ஆராய்ச்சி குழுவினர் தமது கண்டுபிடிப்பு தொடர்பில் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய சமூக குழுவிடம் வெளியிடவுள்ளனர்.

வைத்தியர் சமரகோன் இது பற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது, சீன மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடிப்புகள் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதோடு,   மருத்துவ பரிசோதனைகள் முறைகளுக்கு நேரடியாக  செல்லலாம்,  ஏனெனில் முன்னறிவிக்கப்பட்ட மருந்துகள் ஏற்கனவே, ஐக்கிய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் (FDA) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த நோய்க்குரிய  மருந்துகளை  கண்டுபிடிக்க போராடி வருகின்றனர்.

புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டுள்ளதோடு  கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து பரவுகிறது.

இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் பெப்ரவரி 11 ஆம் திகதி அன்று, இந்த நோய்க்கு 'கொரோனா வைரஸ் நோய் 2019' (சுருக்கமாக கொவிட் - 19 ( COVID-19)) என்று பெயரிட்டுள்ளது .

சீன சுகாதார அதிகாரிகள் சீனாவில் 75,000 க்கும் மேற்பட்டோர்  கொவிட் - 19 நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது.

கொவிட் - 19 முக்கியமாக வுஹானில் இருந்து வரும் பயணங்களுடன் தொடர்புடையது, மேலும் இலங்கை உட்பட சர்வதேச நாடுகளிலும் நாளுக்கு நாள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02