கொக்கைன் தொடர்பில் இன்டர்போல் விசாரணை 

Published By: Ponmalar

15 Jun, 2016 | 06:16 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் வைத்து மீட்கப்பட்ட கொக்கைனுடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்புப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் இன்டர்போலின் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக  வடகொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நிதி அமைச்சில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரேசிலில் இருந்து குறித்த கப்பல் கடந்த 5 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்துள்ளது. அதன்பின்னர் 12 ஆம் திகதி இதற்கான தகவல்கள் கிடைக்கபெற்றது. 13 ஆம் திகதி விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே 80 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள்  மீட்கப்பட்டன. இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தமிழர் மற்றும் இரண்டு சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த சம்பவத்துடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்புப்பட்டுள்ளன. பிரேசிலிலுள்ள பிரான்ஸ் நிறுவனமொன்றின் ஊடாக போதைபொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பிலான விசாரணைகளை இன்டர்போலின் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02