மோசடிக்காரர்களின் முகவர்களாகவே ஆட்சியாளர்கள் - ஜே.வி.பி.

Published By: Vishnu

19 Feb, 2020 | 05:55 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய வங்கி மோசடிகாரர்களின் முகவர்களகவே ஆட்சியாளர்கள் இருந்து வந்திருக்கின்றனர். அதனால் அர்ஜுன் மகேந்திரனுக்கோ அஜித் நிவாட் கப்ராலுக்கோ தண்டனை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கவும் மொட்டு கட்சியினர் அஜித் நிவாட் கப்ராலையும் பாதுகாக்கும்வகையிலே பாராளுமன்றத்தில் செயற்படுகின்றனர். 

முன்னாள் பிரதமரின் நெருக்கமனவராக அர்ஜுன் மகேந்திரன் இருந்தார். அதனால் அரஜுன் மகேந்திரன் அவரது உறவினர்களுக்கு மத்திய வங்கி பிணைமுறிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தார். அதபோன்று மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நெருக்கமான அஜித் நிவாட் கப்ரால் அவரது சொந்தக்காரர்களை மத்திய வங்கி பிணைமுறி வழங்கும் நிறுவனங்களுக்கு நியமித்து பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டார். 

இந்த மோசடிகளை மேற்கொண்டிருப்பது மோசடிமிக்க வலயல் ஒன்றினாலாகும். இவர்கள் அனைவரும் ஒரே உறவினர்களாகும். இந்த மோசடி வலயலுடன் தொடர்புபட்டவர்களே எமது நாட்டை காலாகாலமாக ஆட்சி செய்துவருகின்றது. 

அதனால் இந்த மோசடி காரர்கள் வலயல் எப்படி தனவந்தர்களாக மாறினார்கள் என தேடிப்பார்த்தால், எமது நாடு எவ்வாறு வறுமை நிலைக்கு சென்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46