இலங்கை பாதுகாப்பு படைகள் மீதான சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு நல்லாட்சியே காரணம் : பிரதமர் 

Published By: R. Kalaichelvan

19 Feb, 2020 | 05:47 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு 31/1 பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கிய வரலாற்று தவறினாலேயே ஏனைய நாடுகள் எமது பாதுகாப்புபடைகள் மீது மனித உரிமைகள் குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக் கூடியதான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எனவே தான் தற்போதைய அரசாங்கம் 30/1 இணை அனுசரனை பிரேரணையிலிருந்து பின்வாங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், நல்லாட்சி அரசை உருவாக்கிய அரசியல்கட்சிகள் இராணுவத்தளபதி மீதான அமெரிக்கப் பயணத்தடையை இது வரை கண்டிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தளபதி மீதான பயணத்தடை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது குறித்து மக்களே நீதிபதிகளாக தீர்மானிக்க வேண்டும்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற வகையிலேயே அமெரிக்கா அவர் மீதான இப்பயணத்தடையை விதித்துள்ளது.

ஆனால் இக் குற்றச்சாட்டுக்கள் எவ்வகையானவை என யாருக்குமே தெரியாது. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தின் படி ஒருவர் சட்டத்தின் படி குற்றமிழைத்தவர் என நிரூபிக்கப்படும்பட்சத்தில் மாத்திரமே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

இவ்வாறு குற்றமிழைத்தவர் என நிரூபிக்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்.

இந்த நடைமுறை இலங்கை இராணுவத்தளபதிக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ அமெரிக்க தடை குறித்து பின்பற்றப்படவில்லை.

மிகவும் வன்மையான முறையில் இலங்கை அரசாங்கம் எமது கவலையை அமெரிக்காவுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 31/1 பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கிய வரலாற்று தவறினாலேயே ஏனைய நாடுகள் எமது பாதுகாப்புபடைகள் மீது மனித உரிமைகள் குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக் கூடியதான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04