"பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள குரல் பதிவில் பிரதமரதும், முன்னாள் ஜனாதிபதியினதும் குரல் பதிவுகள் உள்ளன"

Published By: Vishnu

19 Feb, 2020 | 05:43 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் குரல் பதிவுகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குரல் பதிவும் இருக்கின்றது. அவர்களுடன் மோசமான வார்த்தைகளால் உரையாடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. 

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, உறுப்பினர் வரப்பிரசாத பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றில், சபாநாயகர் தெரிவித்ததாக ரஞ்சனின் குரல் பதிவுகளில் அதிகமானவை தூசனமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான் சிறைச்சாலை வாகனத்தில் பாராளுமன்றத்துக்கு வரும்போது சற்று காலதாமதமானது. அதனால் நீங்கள் அவ்வாறான வார்த்தையை பிரயோகித்தீர்களா என எனக்கு தெரியாது. 

அத்துடன் எனது குரல் பதிவுகள் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும் தினத்தை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் அவர்கள் மேற்கொண்ட சேவைகள் தொடர்பாக அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.

அதன் பிரகாரம் நான் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த குரல் பதிவுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் இரண்டு குரல் பதிவுகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரு குரல் பதிவு, ராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவின் ஒரு குரல் பதிவு, ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி ஆஷா அளுத்கமகேயின் இரண்டு குரல் பதிவுகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவின் ஒரு குரல்பதிவு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் ஒரு குரல் பதிவும் உள்ளடங்கி இருக்கின்றன. இந்த குரல் பதிவுகள் எதிலும் தூசன வார்த்தைகள் இல்லை என்றும் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04