மர்மமான முறையில் சீனக் கப்பலில் இந்தியா வந்த  பூனை ; கொரோனோ வைரஸ் அச்சம்

19 Feb, 2020 | 04:38 PM
image

இந்தியா, சென்னைத் துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவுக்கு பயணத்தையுடன் சீனாவின் உற்பத்திகளையும் உலக நாடுகள் தடை செய்துள்ளன.

இந்நிலையில் சென்னை துறைமுகத்துக்கு வந்த சீனக் கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி சென்னைத் துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலில் விளையாட்டு பொம்மைகள் நிறைந்த கொள்கலனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது, அதில் விலங்குகளை பாதுகாப்பாக கொண்டுவரும் கூண்டுக்குள் பூனை ஒன்று அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். 

இதனையடுத்து, அந்த பூனைக்கு கொரோனோ வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சோதனைக்காக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தற்போது  குறித்த பூனை இந்தியாவின் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பூனையை அனுப்பியவர் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பூனைக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை முடிந்ததும் பூனையை மீண்டும் அதே கொள்களனில் வைத்து கப்பலை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52