நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவை அரசானது மூட ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக பரவி வரும் செய்திகள் பொய்யானவையென அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகச் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவானது மேலும் விரிவாக்கப்பட்டு புதிய நிறுவனமாக ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.