7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

Published By: Digital Desk 4

19 Feb, 2020 | 02:27 PM
image

மஸ்கெலியா - நல்லத்தண்ணி நகரிலுள்ள 23 சுற்றுலா விடுதிகள் சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது உணவு பயன்பாட்டு சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய நடைமுறைகளை பின்பற்றி விடுதிகளை நடத்துவதற்கு அவர்களுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் காமினி பெரேரா தெரிவித்தார்.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பக்த அடியார்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்தமான – சுகாதாரமான உணவு மற்றும் பாணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்லத்தண்ணி நகரம் மற்றும் நல்லத்தண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றுக்கு இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிவனொளிபாதமலை பருவகாலத்தையொட்டி இரண்டு பொது சுகாதார அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழுவிலுள்ள அதிகாரிகளால் அனைத்து நிலையங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படும். சட்டவிதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50