'கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை ' என்ற புதிய கட்சி உதயம்...!: மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் தெரிவிப்பு

Published By: J.G.Stephan

19 Feb, 2020 | 03:14 PM
image

'கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை ' என்ற புதிய கட்சி உதயம்: மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் தெரிவிப்பு

(என்.ஜி.இராதாகிருஷ்னண்)

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக பணியாற்றிய மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து வெளியேறி ' கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை ' என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

இக்கட்சியின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு - பிரைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது சமாதான நோக்கோ இல்லை எனவும் அதே வேளை பிரபாகணேஷனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், நான் இரு தடவைகள் நகரசபை உறுப்பினராகவும், மேல் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்துள்ளேன். மனோ கணேஷன் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சரவை அமைச்சராக இருந்த போதிலும் கொழும்பு மாவட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் ? மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்துக்கு சிறந்ததொரு தலைமைத்துவம் இல்லாமலிருந்ததன் காரணமாகவே நாம் அவரைத் தெரிவு செய்தோம். அதன் பின்னர் 2001 - 2009 வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2010 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தைக் கைவிட்டு கண்டிக்குச் சென்று அங்கு தோல்வியடைந்தால் மீண்டும் கொழும்பிற்கே வந்தார். அதன் போது கூட தொகுதி அமைப்பாளர்களும், நகரசபை உறுப்பினர்களும் அவருடன் கைகோர்த்து செயற்பட்டோம். இவரது தம்பியான பிரபாகணேஷனையும் நாமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தோம். எனினும் முன்று மாதங்களின் பின்னர் அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டார்.

கண்டி மாவட்டத்தில் அவர் தோல்வியடைந்து திரும்பிய போது கொழும்பில் வெற்றி பெருவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னின்று செயற்படுத்தினோம். அதன் மூலம் அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும் மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகவே நாம்  கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை என்ற கட்சியை உருவாக்கியிருக்கியிருக்கின்றோம்.

கொழும்பு மாவட்ட தமிழர்களின் அபிலாஷைகளை சமூக அக்கறையுடன் நிறைவேற்றுவதும் தாழ்வாக வாழும் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு உரிய தீர்வு காணுதல் , கொழும்பு மாவட்டத்துக்குள் வசிக்கும் அனைத்து மாவட்ட தமிழர்களையும் ஓரணியில் ஐக்கியப்படுத்தி அதன் மூலம் ஆக்கபூர்வமான  பணிகளை முன்னெடுத்தல் , தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களின் நிலையை சீர்தூக்கி செயற்படாமல் தமது காரியங்களைப் பார்க்கும் தலைமைத்துவத்தை ஓரங்கட்டுதல் ,

கொழும்பு மாவட்டத்தில் உள்ள புத்தி ஜீவிகள் , வர்த்தகத்துறையினர், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் , கலைஞர்கள் , சிறுதொழில் புரிபவர்கள் , அன்றாட உழைப்பில் வாழும் அனைவருடனும் மற்றும் அதிருப்தி அடைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களையும் இணைத்து கொழும்பில் ஒரு புதிய சக்தியைப் பலப்படுத்தல்.

ஏனைய இன மக்களுடன் நல்லிணக்கத்துடனும் மற்றும் தேசிய அரசியலில் உள்ள பிரதான கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் சமூக மறுமலர்ச்சிக்கு பாலமாக செயற்படுதல். ' என்பனவாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48