(எம்.எப்.எம்.பஸீர்)

ஹெரோயின் போதைப் பொருள் 16.9 கிராமை தன்னுடன் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

 

அமீர் யூசுப் அல்  ஹுசைன் என்ற ஜோர்தான் பிரஜைக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தீர்ப்பளித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம்  திகதி கிராண்பாஸ், கொஸ்கஸ் சந்தி பஸ் தரிப்பிடத்தில் வைத்து குறித்த ஜோர்தான் பிரஜை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து  16.9 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றிய பொலிஸார் அவருக்கு எதிராக  கொழும்பு மேல் நீதிமன்றில் ஹெரோயின் போதைப் பொருளை உடன் வைத்திருந்தமை, வர்த்தகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். 

இது குறித்த விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.