யானைக் கூட்டத்தை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை

Published By: Daya

19 Feb, 2020 | 04:47 PM
image

காரை தீவு மாவடிப்பள்ளி நூற்றுக்கணக்கான யானைக் கூட்டம் நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக  வனவிலங்கு அதிகாரிகள்   நடவடிக்கை  எடுத்துள்ளனர்.

திடீரென காரை தீவு மாவடிப்பள்ளி எல்லையைக் கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளைக் கட்டுப்படுத்தி அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக துரித  நடவடிக்கை   தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை மதியம் யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்குப் பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த யானைகளை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக  வனவிலங்கு அதிகாரிகள்  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து வருகின்றனர்.

இதனால் மாவடிப்பள்ளி பாலத்தின் அருகே  போக்குவரத்து  செய்யும்  பொதுமக்கள் அவ்விடத்தில்   குவிந்து யானைக்கூட்டத்தை அவதானிப்பதைக் காணமுடிகிறது.

மேலும்   இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற் கொள்ளப்பட்ட நிலையில் கொட்டப்படும்  குப்பைகளைத் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு  வருகை தருவதுடன் அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00