காலநிலை மாற்றம் - மோசமான உணவுகளால்- உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் உடனடி ஆபத்து – ஐநா அறிக்கை

Published By: Rajeeban

19 Feb, 2020 | 09:28 AM
image

உலகின் ஒவ்வொரு குழந்தையும்  காலநிலை மாற்றம் மற்றும் மோசமான உணவுகளால் உடனடி ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் எந்த நாடும் தனது அடுத்த தலைமுறையை கார்பன் வெளியேற்றம், இயற்கை அழிவு,மற்றும் அதிக கலோரி கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என உலகின் குழந்தை மற்றும் இளம்பருவ சுகாதார நிபுணர்கள் 40 பேர் தெரிவித்துள்ளனர்.

செல்வந்த நாடுகளால் வெளிவிடப்படும் அளவுக்கதிகமான கார்பன் அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலத்திற்கு ஆபத்தானதாக மாறியுள்ளதுடன்,அவர்களை கடும் நோய்த்தாக்கங்களிற்கு உட்படுத்தும் எனவும் ஐநாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடும் வெப்பம் மற்றும் உட்பட பல நோய்த்தாக்கங்களிற்கு குழந்தைகள் ஆளாகக்கூடும் என ஐநா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனமும் யுனிசெவ் அமைப்பும் இணைந்து இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளன.

ஐநாவின் இந்த அறிக்கை கொழும்பு இனிப்பு சேர்க்கப்பட்ட பொருட்கள், புகையிலை மதுபானம் போன்வற்றினை சந்தைப்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின்எந்தவொரு நாடும் சிறுவர்களின் உடல்நலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கவில்லை என்பதே முக்கிய செய்தி என பேராசிரியர் அன்டனியோ கொஸ்டெலோ தெரிவித்துள்ளார்.

வளிமாசடைதல் காரணமாக குழந்தைகளின் நுரையீரல்களிற்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதற்கு தீர்வு காண்பதற்கு குறைந்த அளவு காலமே உள்ளது என தெரிவித்துள்ளார்.

எங்களிடம் தீர்வுகள் உள்ளன ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் தலைமைத்துவமும்  உறுதிப்பாடும் எங்களிடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தரவருமானமுடைய நாடுகளில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட 250 மில்லியன் குழந்தைகள் போசாக்கின்மை மற்றும் வறுமையின் ஏனைய தாக்கங்களால் வளர்ச்சி குறைந்தவர்களாக காணப்படுகின்றனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

இதேவேளை பருமனான குழந்தைகளின் 1975ற்கு பின்னர் 11 மடங்காக அதிகரித்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47