கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தினை மாற்றிய மூவர்- தெரிவு செய்தார் பாக்கிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர்

18 Feb, 2020 | 05:22 PM
image

தங்களுடைய காலத்தில் துடுப்பாட்டத்தின் விதத்தினை மாற்றிய மூவர் என விவியன் ரிச்சட்ஸ் -சனத்ஜெயசூரிய -ஏபிடிவிலியர்ஸ் ஆகிய மூவரையும் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் அக் குறிப்பிட்டுள்ளார்.

 மூன்று வீரர்கள் கிரிக்கெட் விளையாடப்படும் முறையை மாற்றினார்கள் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார்கள் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடப்படும் முறையில் முதலில்மாற்றத்தை ஏற்படுத்தியவர் மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸ் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களிற்கு முன்னர் விவியன் ரிச்சட்சே கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தினை மாற்றினார் என குறிப்பிட்டுள்ள இன்சமாம் அவ்வேளை வேகப்பந்து வீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் பாக்புட்டில் சென்று விளையாடினார்கள்  ஆனால் விவியன் ரிச்சட்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களை முன்னங்காலில் நகர்ந்து ஆடலாம் என்பதை காண்பித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களை அடித்துவிளையாடலாம் என்பதை விவியன் ரிச்சட்ஸ் கற்பித்தார் அவர் எப்போதுமே தலைசிறந்த வீரர் எனவும் இன்சமாம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடப்படும் முறையை மாற்றிய இரண்டாவது வீரர் சனத்ஜெயசூரிய என பாக்கிஸ்தானின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மாற்றத்தை சனத்ஜெயசூரிய கொண்டுவந்தார் என குறிப்பிட்டுள்ள  இன்சமாம் உல் ஹக் முதல் 15 ஓவர்களில் அவர் பந்து வீச்சாளர்களை அடித்துஆட தீர்மானித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

சனத்ஜெயசூரியவிற்கு முன்னர் பந்தை உயர அடித்து ஆடுபவர்கள்  துடுப்பாட்ட வீரர்களாக கருதப்படாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள  இன்சமாம் உல் ஹக் ஆனால் முதல் 15 ஓவர்களில் பந்தை அடித்து விளையாடுவதன் மூலம் சனத் ஜெயசூரிய  அந்த எண்ணத்தை மாற்றுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்றாவது வீரராக தென்னாபிரிக்காவின் ஏபிடிவிலியர்சினை இன்சமாம் உல் ஹக் தெரிவு செய்துள்ளார்.

கிரிக்கெட்டினை மாற்றிய மூன்றாவது வீரர் ஏபிடிவிலியர்ஸ் என குறிப்பிட்டுள்ள இன்சமாம் உல்ஹக் இன்று ரி20 ஒருநாள் போட்டிகளில் காணப்படும் வேகத்திற்கான பாராட்டுகளை நான் ஏபிடிவிலியர்சிற்கே வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏபிடிவிலியர்சே படில் சுவீப் ரிவேர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை விளையாட தொடங்கினார் எனவும் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் ஒழுங்கான துடுப்பாட்ட வீரர்கள் என்பதுடன்  வலுவான மனோநிலையை கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் மீண்டெழக்கூடியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41