திருகோணமலை துப்பாக்கிச் சூடு  - இராணுவ அதிகாரிக்கு கடூழிய சிறை

Published By: Digital Desk 4

18 Feb, 2020 | 04:01 PM
image

திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு மரணத்தை விளைவித்த  சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு   10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (18)  குறித்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  போதே இக்கட்டளை  பிறப்பிக்கப்பட்டது. 

இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் நிலாவெளி - இக்பால் நகர், ஏழாம் கட்டை பகுதியைச் சேர்ந்த  50 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மூதூர்  58-வது இராணுவ முகாமில் கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் இவருடன் மூன்று இராணுவ வீரர்கள் கடமையில் இருந்ததாகவும் குறித்த இடத்திற்கு அருகில்  சைக்கிள் திருத்துமிடம்  காணப்பட்டதாகவும், அங்கிருந்த  மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்து கொண்டு பாரதிபுரம் வீதியூடாக  சென்று கொண்டிருந்த வேளை அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதனை அடுத்து இவர் இறந்து உள்ளார் என்பதனை தென்னை மட்டையினால்  பிரட்டி பார்த்ததாகவும் ஆரம்பகட்ட நீதிமன்ற விசாரணையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. 

 இதேவேளை குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற போது கடமையாற்றிக் கொண்டிருந்த இடத்திலிருந்து  கடமை இடத்துக்கு  செல்லாமல் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் பின்னர் பொலிசார் அவரை கைது செய்ததாகவும்  தெரியவருகின்றது. 

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 19ஆம் திகதி இவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றமை நிரூபணமான  நிலையில்  குறித்த வழக்கு தொடர்பில்  திருகோணமலை  மேல் நீதிமன்றில்  சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு   தொடரப்பட்டது. 

 இந்நிலையில் அவரது வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு இன்றையதினம் வழங்கிய போது இவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அத்துடன் குற்றவாளியான 50 வயதுடைய  குறித்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறை தண்டனை  வழங்குமாறும் கட்டளையிட்டுள்ளது. 

இதேவேளை பாதிக்கப்பட்ட மூதூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா மனோகரன் (41வயது) அவரது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55