227 கோடி ரூபா கொக்கை விவகாரம் ; கைதான மூவரையும் ஏழு நாள் தடுப்பு

Published By: Raam

15 Jun, 2016 | 05:09 PM
image

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றுக்குள்  இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 227 கோடி ரூபா பெறுமதியான 91.3 கிலோ கொக்கைன் எனும் போதைப் பொருள் தொடர்பில் கைது  செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று மாளிகாகந்த நீதிவான் ரஷ்மி குமாரசிறி முன்னிலையில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தி முன்வைத்த வேண்டுகோளை ஏற்றே நீதிவான் இந்த அனுமதியை வழங்கினார்.

குறித்த போதைப் பொருளுடன் சீனியை இறக்குமதி  செய்த நிறுவனத்தின் பொறுப்பாளர் உள்ளிட்ட மூவரையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதனைவிட இந்த கொக்கைன் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் மற்றொருவர் வெளி நாடொன்றில்  உள்ளதாக தற்போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46