பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் விலக ஒத்­து­ழையோம் -சுமந்­திரன்

18 Feb, 2020 | 11:37 AM
image

(ரொபட் அன்­டனி)

ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 40–1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து  இலங்கை அர­சாங்கம் வில­கு­வ­தற்கு  ஒத்­து­ழைப்பு வழங்­கப்­போ­வ­தில்லை என்று பேர­வையின் உறுப்பு நாடுகள்  உறு­தி­ய­ளித்­த­தாக  ஜெனிவா சென்று திரும்­பிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

எதிர்­வரும்  2021 ஆம் ஆண்­டு­வரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரே­ர­ணையை  கால அட்­ட­வ­ணையின் அடிப்­ப­டையில்  விரை­வாக அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்­பதே சர்­வ­தேச சமூ­கத்தின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர்  எதிர்­வரும்  24 ஆம் திகதி  ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­நி­லையில்  இந்தக் கூட்டத் தொடரில்  இலங்கை குறித்து  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர்  அறிக்கை ஒன்றை வெளியி­ட­வுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய  ஜெனிவா சென்­றி­ருந்த தமிழ்க் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  எம்.ஏ. சுமந்­திரன் அங்கு பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.  

அந்த சந்­திப்­புக்கள் மற்றும் அங்கு பேசப்­பட்ட விட­யங்கள் குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்டார்.

சுமந்­திரன் எம்.பி. மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டத் தொடர் ஆரம்­பிப்­ப­தற்கு முன்­ன­தாக நான் ஜெனிவா சென்­றி­ருந்தேன்.  இதன்­போது   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை அலு­வ­ல­க­ததின்  பிர­தி­நி­திகள்  மற்றும்   மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை சந்­தித்து  பேச்ச நடத்­தினேன்.

இதன்­போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை மற்றும்  ஜெனி­வாவின் அடுத்­தக்­கட்ட நகர்­வுகள்  இலங்­கையின் நிலைப்­பாடு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பேச்சு நடத்­தப்­பட்­டது. எமது நிலைப்­பாட்டை நான்  தெ ளிவாக எடுத்­து­ரைத்தேன்.   அர­சாங்கம்   40–1 என்ற பிரே­ர­ணையை ஏற்க மறுத்தால் அல்­லது அதில் ஏதா­வது  மாற்­றங்­களை செய்தால் உறுப்பு நாடுகள்  அது  தொடர்பில் என்ன செய்­ய­வேண்டும் என்று   சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் விளக்­க­ம­ளித்தேன்.

இந்த நிலையில் 40–1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து  இலங்கை அர­சாங்கம் வில­கு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­போ­வ­தில்லை என்று பேர­வையின் உறுப்பு நாடுகள்  உறு­தி­ய­ளித்­தன.

மிக முக்­கி­ய­மாக எதிர்வரும்  2021 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரேரணையை  கால அட்டவணையின் அடிப்படையில் விரைவாக அமுல்படுத்தவேண்டும்  என்பதே  மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38