முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு - ஜனாதிபதி பணிப்புரை

Published By: Daya

18 Feb, 2020 | 10:51 AM
image

தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில்துறையையும் மற்றும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கைத்தொழில் துறையை ஆரம்பிப்பதற்கும் அவற்றை பேணி வருவதற்கும் தடையாக உள்ள பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள விசேட வாய்ப்பு வளங்கள் குறித்து ஆராய வேண்டியதன் அவசியம் பற்றியும் கைத் தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்திக்கான அமைச்சுக்களுக்கிடையிலான செயலணியுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

மோட்டார் வாகனங்களை ஒன்றுசேர்த்தல், உலோகங்கள், பாதணிகள், தோற் பொருட்கள், ஆடைகள், மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மின்சார உபகரணங்கள், தளபாடம் மற்றும் அழகு சாதன உற்பத்திப் பொருட்கள், கைத்தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

உற்பத்தியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வரி மற்றும் சுங்க நடவடிக்கைகளில் முகங்கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் மற்றும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. முறையானதொரு திட்டத்தின் கீழ் கைத்தொழிலை ஆரம்பிக்கும்போது பல்வேறு தரப்பினாலும் முன்வைக்கப்படும் சுற்றாடல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடையாகும். 

முறையற்ற மற்றும் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுற்றாடல் அமைப்புகளும் சமூக ஊடகங்களும் அமைதியாக இருப்பது கவலைக்குரியதாகும். நாட்டின் முன்னேற்றத்திற்காக உரிய தெளிவுடன் முதலீட்டு வாய்ப்புகளுக்கு உதவுவது அணைத்து தரப்பினரினதும் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08