கொவிட் –19 : கப்பலில் சிக்கியுள்ள இரு இலங்கையர்களும் ஆரோக்கியமாகவுள்ளார்கள்

Published By: Digital Desk 3

18 Feb, 2020 | 03:58 PM
image

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் கொவிட் –19 கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ள `டைமண்ட் பிரின்சஸ்` கப்பலிலுள்ள இரு இலங்கையர்களுக்கு நோய்த் தொற்று இல்லை எனவும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும்  ஜப்பானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் சந்தன வீரசேன தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 3 ஆம் திகதி முதல் ஜப்பானிய துறைமுக நகரமான யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள `டைமண்ட் பிரின்ஸஸ்` கப்பலில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் பயணித்தவர்களில் கொவிட் –19 கொரோனா வைரஸ் தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கையானது தற்போது 454 ஆக உயர்வடைந்துள்ளதுடன், ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 513 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கப்பலிலிருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட தமது நாட்டுப் பிரஜைகளை அமெரிக்கா விமானம் மூலம் வெளியேற்றியிருந்ததைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08