காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட பெருமளவு நிதி வழங்குவதாக அமேசன் தலைவர் உறுதி

Published By: Digital Desk 3

18 Feb, 2020 | 10:02 AM
image

உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு  இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

 "அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான  புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது சொத்தில்  கிட்டத்தட்ட 8 சதவீதத்தைக் குறிக்கிறது.

சில அமேசன் ஊழியர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இன்னும் பலவற்றை செய்யுமாறு அவரை வலியுறுத்தியுள்ளனர். 

வெளிநடப்பு மற்றும் சில ஊழியர்கள் பகிரங்கமாக பேசியுள்ளனர். மேலும், பெசோஸ் அதன் கார்பன் தடம் குறித்து விமர்சிக்கப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்வெளி திட்டத்திற்கு நிதியளித்து வருகிறார்.

சில பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது, பெசோஸ் வரையறுக்கப்பட்ட பரோபகாரத்தை செய்துவருகிறார். திங்கட்கிழமை உறுதிமொழிக்கு முன்னர் அவர் செய்த மிகப் பெரிய நன்கொடை வீடற்ற குடும்பங்களுக்கும் மற்றும் பாடசாலைகளுக்கும்  உதவ செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு 2 பில்லியன் டொலர் நிதி  வழங்கியுள்ளார்.

மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இன்று, “பெசோஸ் எர்த் ஃபண்ட்“ (Bezos Earth Fund)  தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

"காலநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு பெரிய அச்சுறுத்தலாகும். தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இந்த கிரகத்தில் காலநிலை மாற்றத்தின் பேரழிவு தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

இந்த முன்முயற்சி விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்  இயற்கை உலகை சிதைவடையாமல் பாதுகாக்கவும் உண்மையான வாய்ப்பை வழங்க நிதியளிக்கும் .

"நாங்கள் பூமியைக் காப்பாற்ற முடியும். பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், தேசிய மாநிலங்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கூட்டு நடவடிக்கை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

⁣⁣⁣ "நான் இத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 10 பில்லியன் டொலர் செலவிடுகிறேன், இந்த கோடையில் மானியங்களை வழங்க ஆரம்பிக்கின்றேன். பூமி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது, அதை நாம் ஒன்றாகப் பாதுகாப்போம்." எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47