லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை லிந்துலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் கடந்து 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் அம்மாசி இலங்கேஸ்வரன் (வயது 24) என்ற இளைஞன் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

படுகாயமடைந்த இளைஞனுக்கும் வேறொரு தரப்பினருக்குமிடையே காணி பிரச்சினை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த வருடம் குறித்த இளைஞன் குறித்த தரப்பினர்களுக்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் இருதரப்பினர்களுக்கிடையே நேற்று முன் தினம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைலப்பில் முடிவடைந்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை இன்று காலை லிந்துலை பொலிஸார் கைது செய்ததுடன் மேலும் இரு சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.