தேர்தலில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது - அமீர் அலி

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 07:10 PM
image

இருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இருபத்திரெண்டு உறுப்பினர்களை பத்தாக குறைத்து பின்னர் அதனை அடுத்த தேர்தலில் ஆறாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.  இந்த சதி குறித்து நாம் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டுக் கட்சியில் போட்டியிடும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றிபெற மாட்டார்கள் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி பொருட்களுக்கான விலைவாசி மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட ஏழு இலட்சத்திலிருந்து எட்டு இலட்சம் வரையான வாக்குகள் மொட்டுக் கட்சியினர்களுக்கு குறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே நாம் எதிர்கொள்ளவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத்தான் வென்றெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் நாம் அனைவரும் சிந்தித்து செயற்பாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33