( எம்.மின்ஹாஜ் )

பிரேஸிலில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொக்கெய்னுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரேஸிலில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 227 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை.

இது எனக்கெதிராக இடம்பெறும் பொய்ப்பிரசாரமாகும். அத்துடன் மஹிந்த அதரவு அணியினரே இவ்வாறு எனக்கு சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பில் செய்திவெளியிட்டுள்ள இணையத்தளத்திற்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.