பகிடிவதைகளும் வாள்வெட்டு வன்முறைகளும்

Published By: Digital Desk 3

17 Feb, 2020 | 05:05 PM
image

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தின் கிளி­நொச்சி வளா­கத்தில், இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மோச­மான பகி­டி­வதை சம்­ப­வங்­களும் அதனைத் தட்டிக் கேட்­பது என்ற பெயரில், மாணவன் ஒரு­வரின் வீட்டின் மீது நடத்­தப்­பட்­டுள்ள தாக்­கு­தலும் யாழ்ப்­பா­ணத்தின் பாரம்­ப­ரி­யத்­துக்கு தலை­கு­னி­வு என்றே கூறலாம்.

தமிழ் மக்­களின் உரி­மைக்­கான அர­சியல் போராட்­டத்தில், யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் மைய நிலையில் செயற்­பட்ட காலம் ஒன்றும் இருந்­தது. தமிழ் மக்­களை அர­சியல் ரீதி­யாக வழி நடத்­து­வ­திலும் அது தீர்க்­க­மான பங்­க­ளிப்­பு­களை செய்திருக்கிறது.

அவ்­வா­றான புகழைக் கொண்ட யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் இன்று, பகி­டி­வதை குற்­றச்­சாட்­டு­களால், கூனிக் குறுகி நிற்கும் நிலையில் இருக்­கி­றது.

பகி­டி­வதை என்ற பெயரில், மாண­விகள் மீது பாலியல் வக்­கி­ரங்கள் அரங்­கேற்­றப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. பாதிக்­கப்­பட்ட மாணவி ஒருவர், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்­றி­ருக்­கிறார்.

இதற்குப் பின்னர், வக்­கி­ர­மான பகி­டி­வ­தை­களில் ஈடு­பட்ட மாண­வர்­களின் படங்கள் ஊட­கங்­களில் பர­வின. புதிய மாண­வர்­களை அச்­சு­றுத்தும், ஒலிப் ­ப­திவும் சமூக ஊட­கங்­களில் கசிந்­தி­ருந்­தது.

ஸ்மார்ட் போன்கள் போன்ற நவீன தொழில்­நுட்ப வச­தி­களை, உலகின் ஒரு பகுதி மக்கள் பொரு­ளா­தார வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, தொடர்­பாடல் திறன் விருத்­திக்­காக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்க, கேவ­ல­மான பகி­டி­வ­தை­க­ளுக்கு இந்த நவீன தொடர்­பு­சா­தன வச­தி­களைப் பயன்­ப­டுத்தும் நிலையில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருப்­பது தமி­ழி­னத்தின் சாபக்­கேடு.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் முற்­றிலும் புனி­த­மா­ன­தாக இருந்­தது என்று கூற முடி­யாது. கடந்த காலங்­க­ளிலும்  அவ்­வப்­போது பகி­டி­வ­தைகள் இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன. ஆனால் இந்­த­ள­வுக்கு எல்லை மீறிய செயற்­பா­டுகள் அரங்­கே­றி­யி­ருக்­க­வில்லை.

பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர், இருந்த யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக சூழல் இன்று இல்லை. அப்­போது, தமிழ் மாண­வர்கள் மாத்­தி­ரமே கல்வி கற்கும் சூழல் நில­வி­யது.

இப்­போது, மூவின மாண­வர்­களும் கற்­கி­றார்கள். வெளி­யி­டத்தில் இருந்து மாண­வர்கள் வரு­கி­றார்கள். வெவ்­வே­றான கலா­சார சூழல்­களில் இருந்தும், பொரு­ளா­தாரப் பின்­ன­ணி­களில் இருந்தும் வரு­கின்ற சூழலில் கலா­சாரப் பிறழ்­வு­க­ளுக்கு வாய்ப்­புகள் இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

ஆனாலும், கீழ்த்­த­ர­மான பகி­டி­வதை குற்­றச்­சாட்­டு­களில் பிற இடங்­களில் இருந்து வந்த மாண­வர்கள் சிக்கிக் கொள்­ள­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்க விடயம்.

தமிழ் மாண­வர்­களே, இந்தக் கேவ­ல­மான பகி­டி­வ­தை­க­ளுக்குப் பின்னால் இருந்­தி­ருக்­கி­றார்கள். சமூ­கத்தில் முன்­னு­தா­ர­ண­மாக திகழ வேண்­டி­ய­வர்­களும் வழி­காட்­டி­க­ளாக மாற வேண்­டி­ய­வர்­களும் வழி­த­வறிச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்தக் குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணைகள் நடப்­ப­தாக கூறப்­பட்­டாலும் அது எந்­த­ள­வுக்கு உண்­மை­யா­ன­தாக நேர்­மை­யா­ன­தாக நடக்கும் என்ற சந்­தே­கங்கள் ஏற்­க­னவே தோன்­றி­யி­ருக்­கின்­றன.

குற்­றச்­சாட்­டுகள் குறித்த பல ஆதா­ரங்கள் வெளி­யா­கி­யுள்ள நிலை­யிலும் யாரும் முறைப்­பாடு தெரி­விக்­க­வில்லை என்று அரச நிர்­வா­கத்தில் உயர் பத­வி­களில் உள்­ள­வர்கள் நழுவ முய­லு­கின்­றனர்.

பகி­டி­வ­தைக்கு எதி­ராக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் கடும் போக்கை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த போதும், யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில்  மாத்­திரம் இந்­த­ள­வுக்கு துணிச்­ச­லுடன் செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள்  என்­பது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்கக் கூடி­யது.

இந்தப் பகி­டி­வதை சம்­ப­வங்கள் வடக்கில், பல்­க­லைக்­க­ழக சமூ­கத்தை தலை­கு­னிய வைத்­தி­ருக்­கி­றது. அதே­வேளை, இந்தச் சம்­ப­வத்தை சாட்­டாக வைத்துக் கொண்டு ஆவா குழுவும் வன்­மு­றையில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

யாழ்ப்­பா­ணத்தில்  இடம்­பெற்ற பல வாள்­வெட்டு சம்­ப­வங்கள், மக்­களை பீதியில் உறைய வைத்­தி­ருந்த நிலையில், ஆவா குழு­வுக்கு எதி­ராக பொலிஸ் அதி­கா­ரிகள் தீவிர நட­வடிக்கையில் இறங்­கி­யி­ருந்­தனர்.

பொலிஸ் மற்றும் படை அதி­கா­ரி­களின் ஆத­ர­வுடன் தான் இந்த வாள்­வெட்டுக் குழுக்கள் செயற்­ப­டு­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டுகள் ஒரு பக்கம் இருக்­கின்­றன.

மறு­பக்­கத்தில் இத்­த­கைய ஆயுதக் குழுக்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தமிழ் அர­சி­யல்­வா­தி­களே தடை­யாக இருக்­கின்­றனர் என்றும்  அவர்கள் தரப்­பிலும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், தமிழ்ச் சமூ­கத்தில் வன்­முறை கலா­சா­ரத்தை உட்­பு­குத்தி, மக்­களை பீதி­யுடன் வாழும் நிலைக்குத் தள்­ளி­யதில் இந்த வாள்­வெட்டுக் குழுக்­க­ளுக்கு முக்­கிய பங்கு உள்­ளது.

வாள்­வெட்டுக் குழுக்கள் தமக்­கி­டையில் மோதிக் கொண்ட சம்­ப­வங்­களும் ஏராளம் நடந்­தி­ருக்­கின்­றன. இவை­யெல்லாம் தென்­னிந்­திய தமிழ் சினி­மாவின் தாக்­கத்­தினால் உரு­வான விளை­வுகள் என்று அர­சாங்க மற்றும் இரா­ணுவத் தரப்­புகள் நீண்­ட­கா­ல­மா­கவே குற்­றம்­சாட்டி வரு­கின்­றன.

தமிழ் இளை­ஞர்கள் வழி­மாறிச் செல்­வ­தற்கு தென்­னிந்­திய சினிமா மோகம் தான் காரணம் என்­பது அவர்­களின் கருத்து. அண்­மைக்­கா­லத்தில் எடுக்­கப்­பட்ட கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை அடுத்து, வாள்­வெட்டுக் குழுக்கள் சற்று அடங்கிப் போயி­ருந்­தன.

ஆனால் பல்­க­லைக்­க­ழக பகி­டி­வதை சம்­ப­வங்­களை சாட்­டாக வைத்துக் கொண்டு ஆவா குழு மீண்டும் கிளம்பியிருக்கிறது.

பகி­டி­வதை குற்­றச்­சாட்­டுக்­குள்­ளாகி, இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள மாணவன் ஒரு­வரின் வீட்டின் மீது தாக்­குதல் நடத்தி, அங்கு சேதங்­களை விளை­வித்­தி­ருக்­கி­றது. இந்த தாக்­கு­த­லுக்கு முக­நூலில் உரி­மையும் கோரப்­பட்­டி­ருக்­கி­றது.

பகி­டி­வதை எந்­த­ள­வுக்கு மோச­மான விஷக் கிரு­மியோ, அதைப் போன்­றதே இந்த வன்­மு­றை­களும். மாண­வனைத் தேடிச் சென்ற ஆயுதக் குழு­வினர், அவர் இல்லை என்­றதும் வீட்­டி­லி­ருந்த பொருட்­க­ளையும் வாக­னங்­க­ளையும் அடித்து நொருக்கி விட்டு சென்­றி­ருக்­கி­றார்கள்.

 ஏதோ பெரி­தாக சாதித்து விட்­டதைப் போல, இந்த தாக்­கு­த­லுக்கு உரிமை கோரி­யி­ருப்­ப­துடன், தாங்­களே சமூ­கத்தின் காவ­லர்கள் என்­பது போல எச்சரிக்­கை­க­ளையும் விடுத்திருக்கிறார்கள். சினிமா கதா­நா­ய­கன்­களைப் போல, அநி­யா­யங்­களைத் தட்டிக் கேட்­ப­வர்­க­ளாக அவர்கள் தங்­களை நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் போலும். அவ்­வாறு தான், இடை­நி­றுத்­தப்­பட்ட மாண­வனின் வீட்டின் மீதும் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.              

இந்தச் சம்­பவம் இத்­தோடு முடியும் என்­றில்லை. சிறிது காலம் ஓய்ந்­தி­ருந்த வாள்­வெட்­டுகள் மீண்டும் அரங்­கே­றலாம். வன்­மு­றை­களும் பழிக்குப் பழி தீர்ப்­பதும் தொடர்ந்து நிக­ழலாம். வாள்­வெட்டு வன்­மு­றை­களால், சமூ­கத்தை திருத்தி விடலாம் என்­பது பொய்­யான கற்பனை. இவ்வாறான செயல்களினால், தமிழ்ச் சமூகம் வன்முறை சூழலில் சிக்கிய ஒன்றாகவே  வெளியே அடையாளப்படுத்தப்படும்.  அதைவிட, பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் வாள்வெட்டுக் குழுக்கள் தலையெடுக்க முனைந்திருப்பது, அவற்றின் கடந்த கால கறைகளை கழுவுகின்ற நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

மாணவர்களின் பகிடிவதையும் வாள்வெட்டுக் குழுக்களின் வன்முறைகளும் தமிழ் மாணவர்களின் கல்விச் சூழலுக்கும் தமிழ் மக்களின் இருப்புக்கும் அச்சுறுத்தலானவை.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரச நிர்வாகம் எந்தளவுக்கு காத்திரமாகச் செயற்படும் என்ற சந்தேகங்கள் உள்ளன.    

இவ்வாறான நிலையில், தமிழ்ச் சமூகம் தான் தங்களின் இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்கு தவறான வழிகளிலிருந்து திரும்பிக் கொள்ள முனைய வேண்டும்.

- சத்ரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சித்தாந்த போர்

2024-04-20 11:28:47
news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16