இலங்கைத் தமிழர் ஸ்ரீநாத் இயக்கத்தில் ‘அன்புள்ள கில்லி’ : முக்கிய வேடத்தில் நாய்

17 Feb, 2020 | 05:04 PM
image

இலங்கைத் தமிழரான ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’.

நாய் ஒன்றை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ள இவ் திரைப்படத்தின் ‘Motion Poster’ தற்போது வெளியாகியுள்ளது.

லெபரேடர் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் 'அன்புள்ள கில்லி' திரைப்படத்தில் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே.ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 

இப்படத்தில் நாயின் கதாபாத்திரத்தின் பெயர் கில்லி, அதுவும் விஜய் ப்பேனாக நடித்துள்ளது. மேலும் 5 நாய்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளன.

இந்தப் படத்தின் இயக்குனரான ஸ்ரீநாத் ராமலிங்கம், ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்ற படத்தை இயக்கியிருந்தார்.  இதனையடுத்த இவர் இயக்கியுள்ள  திரைப்படமே அன்புள்ள கில்லி.

கோலிவூட்டின் வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனரான ஸ்ரீநாத், இந்தப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளதுடன், படக்குழு படம் தொடர்பில் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாயை நடிக்க வைப்பது அவ்வளவு இலகுவல்ல என்ற போதிலும், படக்குழு அனைவருக்கும் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் நாய்களை சிறப்பாக நடிக்கவைத்துள்ளனர்.

தனது நாயுடனான அனுபவத்தை வைத்தே ஸ்ரீநாத் இந்தக் கதையை எழுதியுள்ளார். படத்தில் விசுவல் எபக்ட் காட்சிகளும் நல்ல படியாக வந்துள்ளதாகவும் இதற்கென விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும்  படக்குழு தெரிவிக்கின்றது.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் மேற்கொண்டுள்ளதோடு, அரோல் கொரலி இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகையையும், பாடகியுமான ஆண்ட்ரியா மற்றும் பிரபல பாடகரும் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளமை படம் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் தமிழ் படங்கள் வரிசையில் இணைந்துள்ள இப்படம் பெரிய வெற்றி பெறும் என படக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37