விக்கினேஸ்வரனின் ஐக்கிய முன்னணிக் கொள்கைக் கூட்டணியா ? தேர்தல் கூட்டணியா ?

Published By: J.G.Stephan

17 Feb, 2020 | 02:55 PM
image

முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்சர் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்­டணி எனும் ஜக்­கிய முன்­னணி கடந்த 9ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. சுரேஷ் ­பி­ரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, சிறி­காந்தா தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சியக் கட்சி, அனந்­தி­ ச­சி­தரன் தல­மை­யி­லான ஈழத்­த­மிழர் சுயாட்­சிக்­க­ழகம் என்­பன இவ் ஜக்­கிய முன்­ன­ணியில்  அங்கம் வகிக்­கின்­றன.

சுரேஷின் கட்­சி­யைத்­த­விர ஏனைய கட்­சிகள் பதிவு செய்­யப்­ப­டாத கட்­சி­க­ளாக இருப்­ப­தனால் அக்­கட்­சியே பெயர் மாற்றம் செய்­யப்­பட்டு தமிழ் மக்கள்  தேசியக் கூட்­ட­ணி­யாக செயற்­ப­டப்­போ­கின்­றது. சின்­னமும் மாற்­றப்­ப­ட­வுள்­ளது. சுரேஷின் கட்­சி­யி­னது பூ சின்னம் மாற்­றப்­பட்டு பொங்கல் பானையை சின்­ன­மாகப் பெறு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. தேர்தல் திணைக்­க­ளமும் மாற்­றங்­களை ஏற்றுக் கொண்­ட­தாக செய்­திகள் வரு­கின்­றன.

ஆரம்­பத்தில் ஐக்­கிய முன்­ன­ணியை அமைப்­பது தொடர்­பாக இழு­ப­றிகள் காணப்­பட்ட போதும் தற்­போது கூட்­டணி அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசிய அர­சி­யலை வினைத்­தி­ற­னுடன் முன்­னெ­டுப்­ப­தற்கு ஐக்­கிய முன்­னணி அவ­சி­ய­மா­னதே! தேசிய இன ஒடுக்­கு­முறை என்­பது அந்த இனத்­திற்கு புறத்­தே­யி­ருந்து வரும் ஒடுக்­கு­மு­றை­யாக இருப்­ப­தனால் அத்­தே­சிய இனத்­தி­லுள்ள அனைத்துப் பிரி­வி­னரும் ஒன்­றி­ணைந்து போரா­டு­வது அவ­சி­ய­மா­னதே! தேசிய இனத்­திற்குள் பல்­வேறு கருத்து சார்ந்த பிரி­வுகள் இருக்­கலாம். அதனைக் கடந்து இணைப்­ப­தற்கு ஐக்­கிய முன்­ன­ணியே உத­வி­யாக அமையும். தேசியம் என்­பது மக்கள் திரளின் கூட்டுப் பிரக்­ஞையே! இந்த வகையில் தமிழ்த் தேசியம் என்­பது தமிழ் மக்­களின் கூட்­டுப்­பி­ரக்ஞை ஆகும். இந்த கூட்டுப் பிரக்­ஞையை வினைத்­தி­ற­னுடன் பேணு­வ­தற்கு அக நிலையில் தமிழ்த் தேசி­யத்­திற்கு வெளியிலும் எதுவும் இருக்கக் கூடாது. எதி­ரா­கவும் எதுவும் இருக்கக் கூடாது என்ற நிலை உரு­வாக்­கப்­படல் வேண்டும்.

தமிழ் அர­சி­யலைப் பொறுத்­த­வரை ஒரு ஐக்­கிய முன்­னணி மூன்று விட­யங்­களை முக்­கி­ய­மாகக் கொண்­டி­ருத்தல் வேண்டும். ஒன்று கொள்கை உறு­திப்­பாடு, இரண்­டா­வது சம ­பங்­கா­ளிகள் என்ற நிலை, மூன்­றா­வது வலு­வான ஜன­நா­யகத் தன்மை வாய்ந்த அமைப்புப் பொறி­முறை. இந்த மூன்றும் ஒன்­றோடு ஒன்று தொடர்­பு­பட்­டவை. இதில் சம பங்­கா­ளிகள் என்ற நிலை மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.  சம பங்­கா­ளிகள் என்ற நிலை ஏற்­கப்­ப­டாத ஐக்­கிய முன்­னணி ஒரு தேர்தல் கூட்­டாக இருக்­குமே தவிர ஒரு கொள்கைக் கூட்­டாக இருக்க முடி­யாது. தமிழ் மக்கள் தேசம், இறைமை, சுய­நிர்­ணயம் கொண்ட ஒரு அர­சியல் தீர்வை இலக்­காகக் கொண்­டி­ருப்­ப­தனால் அந்த இலக்கை அடையும் வரை கொள்கைக் கூட்டே அவ­சி­ய­மா­னது.

ஐக்­கிய தேசியக் கட்சி உரு­வாக்­கிய கூட்டைப் போலவோ அல்­லது மஹிந்­தரின் பொது­ஜன முன்­னணி உரு­வாக்­கிய கூட்டைப் போலவோ அல்­லது தமி­ழ­கத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உரு­வாக்­கிய கூட்டைப் போலவோ தமிழ் மக்கள் அமைக்க முடி­யாது. மேற்­கூ­றி­ய­வை­யெல்லாம் தேர்தல்  கூட்­டுக்­களே தவிர கொள்கைக் கூட்­டுக்­க­ளல்ல. தமிழ் மக்கள் தேசியக் கூட்­ட­ணியின் அங்­கு­ரார்ப்­பண கூட்­டத்தின் போது அனந்தி சசி­தரன் இது கொள்கைக் கூட்­டல்ல. தேர்தல் கூட்­டுத்தான் எனக் கூறி­யமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

தவிர தமிழ் அர­சி­யலின் வர­லாற்­றையும் இது விட­யத்தில் கவ­னத்தில் கொள்­வது அவ­சியம். தமிழ் அர­சியல் மரபில் உரு­வா­கிய ஐக்­கிய முன்­ன­ணிகள் அனைத்தும் தோல்­வியில் முடிந்­தி­ருக்­கின்­றன. தமிழர் விடு­தலைக் கூட்­டணி (1972), ஈழத்­தே­சிய விடு­தலை முன்­னணி (1985), தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு (2002), தமிழ் மக்கள் பேரவை (2016) அனைத்தும் தோல்­வி­க­ளையே தழு­வி­யுள்­ளன. இத்­தோல்­வி­க­ளுக்கு பிர­தான காரணம் சம­பங்­கா­ளிகள் என்ற நிலை ஏற்­கப்­ப­டா­மையே! இந்­நிலை ஏற்­கப்­ப­டா­த­தினால் தான் சுரேஷ் ­பி­ரே­மச்­சந்­திரன் கூட தமிழத் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளியே­றி­யி­ருந்தார்.

விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் ஒரு ஐக்­கிய முன்­னணி உரு­வாக வேண்டும் என்­பதில் முதலில் அக்­கறை கொண்­ட­வர்கள் யாழ்ப்­பா­ணத்தில் செயற்­படும் சில கருத்­து­ரு­வாக்­கி­களே! அவர்­களில் இப்­பத்­தி­யா­ளரும் ஒருவர். இக்­க­ருத்­து­ரு­வாக்­கி­களே விக்கி­னேஸ்­வ­ரனைச் சந்­தித்து ஐக்­கிய முன்­ன­ணியின் அவ­சி­யத்தை எடுத்­து­ரைத்­தனர். விரைந்து செயற்­ப­டு­மாறு கூறினர். கருத்­து­ரு­வாக்­கி­களின் வேண்­டு­கோளை ஏற்றுக் கொண்ட விக்­கி­னேஸ்­வரன் அதற்­கான கொள்கை ஆவணம் ஒன்றை நீங்­களே தயா­ரித்து தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

அவ­ரது வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க கொள்கை ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­டது. அதில் சம பங்­கா­ளிகள் என்ற நிலைக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ராக விக்­கி­னேஸ்­வரன் இருப்­பார் என்றும் அதன் பின்னர் தலைவர் மத்­திய குழு­வினால் பெரும்­பான்மை அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­படல் வேண்டும் என்று கூறப்­பட்­டது. தலைவர் தவிர்ந்த ஏனைய பத­விகள் பெரும்­பான்மை அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­படல் வேண்டும் என்றும் கூறப்­பட்­டது. மேலும் மதத் தலை­வர்கள், கல்­வி­யா­ளர்கள், கருத்­து­ரு­வாக்­கிகள், அடங்­கிய ஆலோ­ச­னைக்­குழு ஒன்று உரு­வாக்­கப்­படல் வேண்டும் என்றும் வேட்­பாளர் பட்­டி­யலை கட்­சித்­த­லை­வர்­களும், ஆலோ­ச­னைக்­குழு அங்­கத்­த­லை­வர்­களும் இணைந்து தயா­ரிக்க வேண்டும் என்றும் கூறப்­பட்­டது.

கொள்கை ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­ட­வு­ட­னேயே விக்­கி­னேஸ்­வ­ரனின் மின்­னஞ்சல்

முக­வ­ரிக்கு அவ் ஆவணம் அனுப்­பப்­பட்­டது. நீண்ட நாட்­க­ளாக அவ் ஆவணம் கிடைத்­தது என்­பதைக் கூட சம்­பந்­தப்­பட்ட கருத்­து­ரு­வாக்­கி­க­ளுக்கு தெரிவிக்­கப்­ப­ட­வில்லை. வற்­பு­றுத்திக் கேட்ட பின்னர் தாங்கள் ஒரு ஆவணம் தயா­ரித்து இருப்­ப­தா­கவும் அதனை அனுப்பி வைப்­ப­தா­கவும் கூறி அதனை அனுப்பி வைத்­தார்கள். அவ் ஆவ­ணத்தில் விக்­கி­னேஸ்­வ­ரனின் கட்­சி­யான தமிழ்­மக்கள் கூட்­ட­ணிக்கு பிர­தான முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டது. அர­சியல் பீடத்தில் தலைவர் தவிர விக்­கி­னேஸ்­வ­ரனின் கட்­சிக்கு 50%, சுரேஷின் கட்­சிக்கு 20%  ஏனைய கட்­சி­க­ளுக்கு 10% என பிர­தி­நி­தித்­துவம் ஒதுக்­கப்­பட்­டது. வேட்­பாளர் பட்­டி­ய­லிலும் 50%  விக்­கி­னேஸ்­வ­ரனின் கட்­சிக்கு இருக்க வேண்டும் எனக் கூறப்­பட்­டது.

உண்­மையில் மாற்று என்­பது எந்த தவ­று­களால் மாற்று உரு­வாக்­கப்­பட்­டதோ அதன் தவ­று­களை திருத்­து­வ­தாக இருக்க வேண்டும். இங்கு தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்­புக்கு மாற்று என்று கூறி­ய­வர்கள் இன்னோர் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பையே உரு­வாக்­கி­யுள்­ள­ளனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் மேலா­திக்கம் இருப்­பது போல இங்கு தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் மேலா­திக்கம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய முன்­னணி தொடர்­பாக இப்­பத்­தி­யா­ளரின் இலக்­காக இருந்­தது இது தான். முதலில் விக்­கி­னேஸ்­வ­ரனின் தலை­மையில் கொள்கை உறு­திப்­பா­டு­டைய சம பங்­கா­ளி­களைக் கொண்ட முன்­மா­தி­ரி­யான ஐக்­கிய முன்­னணி ஒன்றை உரு­வாக்கி அதனை செயற்­பட விடு­வது. இதன் வளர்ச்­சியில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­போடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யோடும் ஒரு உரை­யா­டலை நடத்தி அவர்­க­ளையும் இணைத்துக் கொண்டு பெரிய ஐக்­கிய முன்­ன­ணியை உரு­வாக்­கு­வது. பின்னர் பொது அமைப்­புக்­களின் ஐக்­கிய முன்­ன­ணி­யையும் இத­னுடன் இணைத்து தேசிய பேரியக்கம் ஒன்றை உரு­வாக்­கு­வது.  அந்த தேசிய பேரியக்­கத்­துடன் உலகத் தமி­ழர்­க­ளையும், உலக முற்­போக்கு ஜன­நா­யக சக்­தி­க­ளையும் இணைத்து உலகம் தழு­விய தேசிய பேரியக்­க­மாக அதனை வளர்த்­தெ­டுப்­பது. இப்­பத்­தி­யா­ள­ருடன் கூட இருந்த கருத்­து­ரு­வாக்­கிகள் இது நடை­மு­றை­ச்­சாத்­தி­ய­மற்­றது என்­றனர். ஆனாலும் இது விட­யத்தில் இதுவே தமிழ் மக்­களை அழி­வி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான உகந்த வழி­வ­ரை­படம் என்­பது இப்­பத்­தி­யா­ளரின்  அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யாக உள்­ளது.

மைத்­திரி – ரணில் ஆட்­சிக்­கா­லத்தில் இருந்த அர­சியல் சூழல் தற்­போது இல்லை. பெருந்­தே­சிய வாதத்தின் இன­வாத முகமே தற்­போது ஆட்­சியில் இருக்­கின்­றது. எதிர்க்­கட்­சி­யிலும் பெருந்­தே­சிய வாதத்தின் லிபரல் முகங்கள்

ஒதுக்­கப்­பட்டு விட்­டன. அங்கு இன­வாத முகமே மேல் நிலைக்கு வந்­துள்­ளது. ஆளும் கட்­சியும் இன­வாத முகம், எதிர்க் கட்­சியும் இன­வாத முகம் இரண்டும் இணைந்து தென்­னி­லங்­கையை இன­வாத பாசிச நிலைக்கு வளர்த்து விட்­டுள்­ளன. தமிழ் அர­சியல் இந்த யதார்த்­தத்­திற்கு முகம் கொடுக்க வேண்டும்.

அடுத்­தது இலங்கைத் தீவு முன்­னெப்­போ­தையும் விட சர்­வ­தேச நிகழ்ச்சி நிர­லுடன் இறுக்­க­மாகப் பிணைக்­கப்­பட்­டுள்­ளது. இனி சர்­வ­தேச நிகழ்ச்சி நிரல் செல்­லு­மி­ட­மெல்லாம் இலங்கைத் தீவும் செல்ல வேண்டும். தமிழ் அர­சி­யலும் கூடவே செல்ல வேண்­டிய நிர்ப்ந்த நிலை. இதனால் தமிழ்த் தரப்பு சர்­வ­தேச அர­சி­யலை கையாள வேண்டும்

எனவே பெருந்­தே­சிய வாதத்தின் இன­வாத முகத்­திற்கு முகங் கொடுத்தல், சர்­வ­தேச அர­சி­யலைக் கையாளல் என்ற இரண்டு பெரும் நெருக்­க­டிகள் தமிழ் அர­சி­ய­லுக்கு இன்று ஏற்­பட்­டுள்­ளன. தமிழ்த் தரப்பு பல­மாக இல்­லாமல் இந்த நெருக்­க­டி­களை வெற்றி கொள்ள முடி­யாது. அவ்­வாறு பல­மாக இருப்­ப­தாயின் இன்று தேவை­யா­னது மாற்று அர­சியல் அல்ல மாறாக ஒன்­றி­ணைந்த அர­சி­யலே!  தமிழ்த் தேசி­யப்­ப­ரப்பில் செயற்­படும் அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரையும் ஒரு குடையின் கீழ் ஒன்­றி­ணைப்­பது இன்று மிகவும் அவ­சி­ய­மா­னது.

ரணில் – மைத்­திரி ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணக்க அர­சியல் என்ற பெயரில் சர­ணா­கதி அர­சி­யலை நடத்­தி­யது. தமிழ் அர­சி­யலில் இருந்து தமிழ்த் தேசி­யத்தை நீக்கம் செய்­தது. தமிழ் அர­சி­யலின் சர்­வ­தேச மயத்தை நீக்கம் செய்­தது. வெறும் அபி­வி­ருத்தி அர­சி­ய­லுக்குள் தமிழ் அர­சி­யலை முடக்க முற்­பட்­டது மொத்­தத்தில் தமிழ்த் தேசிய அர­சி­யலை செங்­குத்­தாக கீழி­றக்­கி­யது. இந்­நி­லையில் தமிழ்த் தேசி­யத்தை கரு­நி­லை­யி­லா­வது பாது­காப்­ப­தற்கு மாற்று அர­சியல் தேவைப்­பட்­டது.

இன்று அவ்­வா­றான நிலை இல்லை. கோத்தா – மஹிந்த அரசு அனைத்துத் தமிழ்த்­த­ரப்­பி­ன­ரையும் ஒரு பக்­கத்­திற்கு தள்­ளி­விட்­டுள்­ளது. தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­பி­னாலும் இணக்க அர­சி­ய­லுக்கு கோத்தா–  மஹிந்த அரசு தயா­ராக இல்லை. கூட்­ட­மைப்பு கொஞ்சி விளை­யா­டு­வ­தற்கு ரணிலும் மேல் நிலையில் இல்லை. மறு பக்­கத்தில் மேற்­கூ­றிய நெருக்­க­டிகள் தோன்றியுள்ளன. இதனால் இன்று ஒன்றிணைந்த அரசியலே தேவை. இது விடயத்தில் தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அனைத்துத் தரப்பினரையும் பேருந்தில் ஏற்ற வேண்டும்  கொள்கை உறுதிப்பாடுடையவர்கள் பேருந்தின் சாரதியாக இருக்க வேண்டும்.

 பாராளுமன்ற அரசியல் மூலம் தமிழ்த் தரப்பு சாதிக்கப் போவது சொற்பமானது! மக்களின் அங்கீகாரம் கிடைத்தல், பாராளுமன்றத்தை மேடையாகப் பாவித்தல் என்பதற்கு அப்பால் இந்தத் தேர்தல் அரசியல் எதையும் தரப் போவதில்லை. உண்மையில் தேர்தல் அரசியலுக்கு வெளியில் தான் மாபெரும் பணி காத்துக் கிடக்கிறது. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரையிலும் கூட ஒன்றிணைந்த அரசியல் இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் - 01, வன்னி  01, திருகோணமலை  01, மட்டக்களப்பு  02, அம்பாறை  01, தேசியப்பட்டியல் - 01 என ஏழு ஆசனங்களை தமிழ்த் தேசியப் பரப்பு இழக்க வேண்டி ஏற்படலாம். காலம் இன்னமும் கடந்து விடவில்லை வலிமையான சிவில் தலையீடு ஒன்று உருவாக்கப்பட்டால் ஒன்றிணைந்த அரசியலைக் கொண்டு வரலாம். இது விடயத்தில் கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், மதத் தலைவர்களுக்கு தான் அதிகபணி காத்துக்கிடக்கிறது.  

- சி.அ.யோதிலிங்கம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48