கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் 12 பேருக்கும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.