யாழ். -  மீசாலை புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் 25 வயது மற்றும் 51 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.