அபாண்டமான குற்றச்சாட்டு !

Published By: J.G.Stephan

17 Feb, 2020 | 02:35 PM
image

பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக்ஷ ஆகியோர் தமது இந்­திய விஜ­யத்தின் போது இலங்கைத் தமி­ழர் விவகாரம் தொடர்பில் தெரி­வித்த கருத்­துகள் நேர­டி­யா­கவே கூட்­ட­மைப்பை குற்­றம் ­சாட்டும் ஒரு பிர­சா­ர­மா­கவே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வி­ரு­வரும் இந்­தி­யாவில் வைத்துத் தெரி­வித்த கருத்­து­க்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்றுக்கும் உதவாத கட்­சி­யென தரம் தாழ்த்தியுள்ளதுடன் மறை­மு­க­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு தலைமை தாங்கும் அரு­கதை கூட்­ட­மைப்­புக்கு இல்­லை­யென்ற விமர்­சிப்பைக் கொண்­ட­தா­கவே அமைந்துள்ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து இடைக்­கால அர­சாங்­கத்தின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் மஹிந்த ராஜபக் ஷ, தனது முதல் வெளி­நாட்டுப் பய­ண­மாக கடந்த சனிக்­கி­ழமை (8.2.2020) இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்தார். உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நமது பிர­தமர், இந்­தியப் பிர­தமர் மோடியைச் சந்­தித்து இரு நாட்டு உற­வுகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது இந்­தியப் பிர­தமர், இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­காரம் தொடர்பில் இந்­தி­யாவின் நிலைப்­பாட்டை, வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் மட்­டுமே தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்ற முடியும் என்ற கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அவை மட்­டு­மின்றி பல தசாப்த கால­மாக தீர்க்­கப்­ப­டாமல் நீண்டு புரை­யோடிப் போயி­ருக்கும் இலங்கைத் தமி­ழரின் இனப்­பி­ரச்­சி­னைக்கு கால அட்­ட­வணை வகுத்து தீர்வு காணப்­பட வேண்­டு­மென்ற தனது ஆலோ­ச­னை­யையும் அழுத்திக் கூறி­யி­ருந்­த­தாக இந்­திய ஊட­கங்கள் செய்­தி­களைத் தெரி­வித்­தி­ருந்­தன.

இலங்­கைக்குள் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­துவம், சமா­தானம், நீதி, அர­சியல் தீர்வு ஆகி­ய­வற்­றுக்­காகக் காத்­தி­ருக்கும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் இலங்கை அரசு நிறை­வேற்ற வேண்­டு­மென்று நம்­பு­கி­றோ­மென தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் இந்­தியப் பிர­தமர். இந்­தியப் பிர­த­மரின் ஆலோ­ச­னையை இலங்கைப் பிர­தமர் கவ­ன­மாகச் செவி­ம­டுத்­த­போதும் பதில் வார்த்­தைகள் எதை­யுமே தெரி­விக்­காமல் ஓர் அரச தூது­வன் போல் விடை­பெற்று வந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நிலை­யில்தான் இந்­தியப் பத்­தி­ரி­கை­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்த இலங்கைப் பிர­தமர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்­பாக கார­சா­ர­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தது மாத்­தி­ர­மல்ல, இலங்கைத் தமிழர் விவ­கா­ரத்தில் தானும், தனக்குப் பின் – முன்­னுள்ள அர­சாங்­கங்­களும் தாரா­ள­வாதக் கொள்­கையைப் பின்­பற்றி வந்­துள்ளோம். ஆனால் தம்மை தமிழ் மக்­களின் ஏகப்­பி­ர­திநிதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சாணக்­கி­ய­மா­கவும் சாது­ரி­ய­மா ­கவும் நடந்து கொள்­ள­வில்­லை­யென நேர­டி­யா­கவே குற்றம் சாட்­டி­யுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தற்­போது பேச்­சு­வார்த்­தை­களில் அக்­க­றை­யில்லை. அவர்கள் இலங்கையின் பெரும்­பான்மைச் சமூகம் விரும்­பாத விட­யங்­க­ளையே தமது கோரிக்­கை­க­ளாக முன்­வைத்து வரு­கி­றார்கள். அர­சியல் அமைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்தில் உள்­ள­வாறு அதி­காரப் பகிர்வை முன்­னெ­டுப்­ப­தற்கு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட வேண்­டு­மானால் தமி­ழர்­க­ளுக்­காக பேசக்­கூ­டிய பொறுப்­புள்ள தலை­மை­களும் இல்லை, காத்­தி­ர­மான கட்­சி­க­ளு­மில்லை. இதன் கார­ண­மா­கவே பொதுத் தேர்­தலை விரைவில் நடத்தி தமி­ழர்­களால் தெரிவு செய்­யப்­படும் எல்லாப் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேசக் காத்­தி­ருக்­கிறோம் என பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அவரின் இக் கருத்­தா­னது நேர­டி­யா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் தமிழ் தலை­மை­க­ளையும் குற்றம் சாட்டும் முயற்­சி­யா­கவே காணப்­ப­டு­கி­றது. இவரின் இக் கருத்­தோடு ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தனது இந்­திய விஜ­யத்­தின்­போது தெரி­வித்த கருத் ஒப்­பிட்டுப் பார்ப்பின் இரண்­டுக்கும் இடை­யே­யுள்ள நேர்த் தன்­மைகள் மறை­முக கருத்­துகள் மிகத் துல்­லி­ய­மா­கவே வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ ஒரே கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­த­போ­திலும் பொறுப்பு வாய்ந்த இரு வேறு­பட்ட பத­வி ­களை வகிப்­ப­வர்கள். அது மட்­டு­மின்றி தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் போராட்­டங்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­வர்கள் மாத்­தி­ர­மின்றி அவர்­களின் ஆழ­மான அபி­லா­ஷை­களை அறிந்­த­வர்கள். இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பரி­ணாம வளர்ச்சிப் பாதையை நன்கு அறிந்­த­வர்­க­ளுங்­கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் தமிழ்த் தேசிய உணர்­வுக்கும் ஒரு நீண்­ட­ கால வர­லா­றுண்டு. அது பாரா­ளு­மன்ற ஆச­னங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கா­கவோ அன்றி குடும்ப பாரம்­ப­ரி­யங்­களை பறை­சாற்­று­வ­தற்­கா­கவோ பிறப்­பிக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யல்ல. ஒரு யுகம் இன்­னொரு யுகத்தை பிர­ச­விக்­கும்­போது அந்த யுகப்­ பி­ர­சவம் கார­ண­மாக உதித்த கட்சி.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தற்­போது பேச்­சு­வார்த்­தையில் அக்­க­றை­ யில்லை, தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின் அவர்கள் பாதையில் தமி­ழர்­க­ளுக்­கான தனி நாடொன்றை உரு­வாக்­கு­ வ­தற்­கான முயற்­சி­யிலும் அதி­காரப் பகிர்வு பற்­றி­யுமே அதி­க­மாகப் பேசி­ வ­ரு­கி­றார் கள் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பேட்­டி­ய­ளித்­துள்ளார். அவரின் இக் கருத்து குற்றம் சாட்டும் வகை­யிலும் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து கூட்­ட­மைப்பை அந்­நி­யப்­ப­டுத்தும் வகை­யிலுமேயே கூறப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது தெளி­வா­கவே விளங்கிக் கொள்ளக் கூடிய விட­ய­மாகும்.

புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­பட்ட மறு­வா­ரமே, தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மான அழைப்பு வரு­மாக இருந்தால் அதில் கலந்து கொள்­வ­தற்கு ஆர்­வ­மாக இருக்­கி­றோ­மென்ற சமிக்ஞையை கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் வெளிக்­காட்­டி­யி­ருந்தார். அது மட்­டு­மின்றி ஜனா­தி­ப­தி­ய­வர்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு நாட்டின் நன்மை கருதி செயற்­பட வாருங்கள் என அவரால் விடுக்­கப்­பட்ட அழைப்­பையும் ஏற்றுக்கொள்ளும் சூழ்­நிலை கொண்­ட­வர்­க­ளா­கவே கூட்­ட­மைப்­பினர் செயற்­பட்டு வரும் நிலையில் பேச்­சு­வார்த்­தையில் ஆர்­வ­மில்­லை­யென்று கூறு­வது ஏற்­பு­டைத்­தான குற்­றச்­சாட்­டல்ல.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் இந்­திய அரசின் தூண்­டுதல் மற்றும் சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை முன்­வைப்பேன் என வாக்­கு­றுதி நல்­கி­யவர் இன்­றைய பிர­த­ம ரும் அந்நாள் ஜனா­தி­ப­தி­யு­மா­கிய மஹிந்த ராஜபக் ஷ. ஆனால் அவரின் வாக்­கு­று­திகள் எந்­த­வொரு நிலை­யிலும் முன்­கொண்டு செல்­லப்­ப­ட­வில்லை. தமிழ்த் தலை­மை­களும் மக்­களும் பெருத்த ஏமாற்­றத்­துக்கே ஆளாக்­கப்­பட்­டார்கள்.

மஹிந்த ராஜபக் ஷ இந்­தி­யா­வுக்குக் கொடுத்த வாக்­கு­று­தி­யாக இருக்­கலாம். ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லா­ள­ருடன் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யாக இருக்­கலாம். வெறும் வாய்ப்­பேச்­சாக இருந்­ததே தவிர அவற்றை நிறை­வேற்றுவதற்கோ அல்­லது கலந்­து­ரை­யா­டு­வ­தற்கோ எந்தக் கரி­ச­னையும் காட்­டப்­ப­ட­வில்லை. தமிழ் மக்கள் யுத்­தத்தில் மாத்­திரம் தோற்­றுப்­போ­ன­வர்­க­ளாக எண்­ணப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி அதிகாரப் பகிர்வு விட­யத்­திலும் திட்­ட­மிட்ட முறை யில் ஏள­னப்­ப­டுத்தப்பட்­டார்கள்.

யுத்தம் முடிவு காணப்­பட்­ட­தாக பிர­சங்கம் செய்த மஹிந்த ராஜபக் ஷ, தமிழ் மக்­களின் நீண்ட காலப்­ பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணும் வகையில் 13ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் சென்று அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு தான் தயார் என்ற பொய்­யான மொழி­க­ளை­யெல்லாம் அவிழ்த்து விட்டார். இந்த வாக்­கு­று­தி­களை அவர் வாரி வழங்­கி­யி­ருந்த போதிலும் அதற்­கான முயற்­சி­க­ளையோ நட­வ­டிக்­கை­க­ளையோ எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மேற்­கொள்­ளாமல் போக்குக் காட்­டிய வித்­தையே காணப்­பட்­டது.

இந்த விவ­காரம் தொடர்பில் இந்­திய அர­சா­னது பல­மான அழுத்­தத்தைப் பிர­யோ­கித்ததன் கார­ண­மாக தமிழ் தேசியக் கூட்­ட ­மைப்­புடன் அர­சியல் தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டிய நிர்ப்­பந் தம் ஏற்­பட்­டது. இந்த நிர்ப்­பந்­தத்­துக்குப் போக்­குக்­காட்டும் வகை­யி­லேயே 2011 ஆம்­ ஆண்­டுக்கும் 2012ஆம் ஆண்­டுக்கும் இடை­யே­யுள்ள சுமார் 12 மாத காலங்­களில் அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தது. நடத்­தப்­பட்ட ஒவ்­வொரு பேச்­சு­வார்த்­தையும் அர்த்­த­மற்­ற­தா­கவும் காலத்­தைக் ­க­டத்தும் பேச்­சு­வார்த்­தை­க­ளா­க­வுமே இ­ருந்­த­தென கூட்­ட­மைப்­பினர் தமது அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

சுமார் 16 சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் அர­சாங்­கத்­துக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் இடம்­பெற்­ற­போ­திலும் அவை அனைத்­துமே அர்த்­த­மற்­ற­தாயும் இலக்கை நோக்கி நக­ராத பேச்­சு­வார்த்­தை­யாகவும் இருந்­தன. மாத்­தி­ர­மின்றி அர­சாங்­கத்தின் சார்பில் கலந்து கொண்­ட­வர்கள் தீர்­மானம் எடுக்கத் தகு­தி­யற்­ற­வர்­க­ளா­கவும் பேச்­சு­வார்த்­தையின் குறிக்­கோள்­களை திசை­ தி­ருப்பும் நோக்கம் கொண்­ட­வர்­க­ளா­கவுமே காணப்­ப­டு­கி­றார்கள் என்று விமர்­ச­னங்­கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­பேச்­சு­வார்த்­தையை அர­சாங்கம் திட்­ட­மிட்ட முறையில் இடை நடுவில் முறித்துக் கொண்டு வெளி­யே­றி­யமைக்கு அதன் உண்மைத் தன்மை இன்­மையே காரணம் என்று கூடக் கூறலாம்.

பேச்­சு­வார்த்­தையின் முறிவைத் தொடர்ந்து புதிய நாட­க­மொன்று அரங்­கேற்றப்­பட்­டது. அதுதான் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை அமைத்­தமை. இத் தெரி வுக் குழு­வுக்கு கூட்­ட­மைப்பு கலந்து கொண்டால் மாத்­தி­ரமே அர­சியல் தீர்வு குறித்து விவா­திக்க முடியும் என்று புதி­ய­ தொரு நிபந்­த­னையை முட்­டுக்­கட்­டை­யாகப் போட்­டது.

இவ்­வே­ளையில் புதி­ய­தொரு நிபந்­த­னையை முன்­வைக்­க ­வேண்­டி­யி­ருந்­தது. ஏலவே முறி­வ­டைந்த பேச்­சு­வார்த்தை கார­ண­மாக ஏமாற்றம் அடைந்­தி­ருந்த கூட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­துடன் அர­சியல் தீர்வு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்தி அதில் உடன்­பா­டொன்று எட்­டிய பின்­னரே தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிப்­பது குறித்து பரிசீ­லிக்க முடி­யு­மென பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­தி­ருந்­தது.

அர­சாங்கம் தனது இந்த முயற்­சியும் தோல்வி கண்ட நிலை­யில்தான் பேரா­சி­ரி யர் திஸ்ஸ விதா­ரண தலை­மையில் சர்வ கட்சிக் குழுவை அமைத்துக் கொண்­டது. ஒன்றன் பின் ஒன்­றான எந்த முயற்­சி­க­ளுமே கைகூடும் அள­வுக்கு முயற்­சிகள் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­க­ப­டாத நிலை கார­ண­மாவே பேச்­சு­வார்த்­தைகள் தோல்வி கண்­டன. பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. விதா­ரண தலை­மையில் அமைக்­கப்­பட்ட சர்வ கட்சிக் குழு போலிப் போக்­குக்கு சந்­தித்து கலந்­து­ரை­யா­டப்­பட்ட போதும் ஆண்­டி கள் கூடி மடம் கட்­டிய கதை­யா­கவே அமைந்­தது. அறிக்­கையில் சொல்­லப்­பட்ட ஆலோ­ச­னைகள் அனைத்தும் பெட்­ட­கத்­துக்குள் பூட்டி வைத்த பட்டுக் குஞ்­சத்தை கறையான் அரித்த நிலை­யாக மாறி­யது. அதி­காரப் பகிர்வு விட­யத்தில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்த பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ, பழை­ய­படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய அம்­பு­லி­மாமா கதை போல் மாகாண சபை முறை­மையை நாம் பலப்­ப­டுத்தப் போகிறோம். அவ்­வாறு செய்­யும்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் அபி­வி­ருத்­திக்­காக நாம் வழங்­க­வி­ருக்கும் நிதி வளங்­களை குறித்த மாகாண சபைகள் பயன்­ப­டுத்த வேண்டும். கடந்த காலங்­களில் அவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அபி­வி­ருத்­தி­க­ளுக்கு நாம் உத­வினோம். ஆனால் பிராந்­தி­யங்­களை அபி­வி­ருத்தி செய்­யாமல் நாம் அனுப்­பிய பணத்தை திருப்பி அனுப்பி வைத்­தார்கள். நாமே நேர­டி­யாக அபி­வி­ருத்­தி­களைச் செய்­ய­ வேண்­டி­யி­ருந்­தது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆளு­கைக்கு உட்­பட்ட சபை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு கூட்­ட­மைப்பு எப்­போதும் அக்­கறை காட்­ட­வில்லை என்ற விடு­க­தையே அவிழ்த்து விடப்­பட்­டி­ருக்­கி­றது.

2006ஆம் ஆண்டு வட, கிழக்குப் பிரிக்­கப்­பட்­டதன் பின் கிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் நடத்­தப்­பட்டு தங்­களின் விசு­வா­சி­களின் கையில் கிழக்கு மாகாண சபை ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்போ அல்ல தமிழ்க் கட்­சி­களோ சுதந்­தி­ர­மாக போட்­டி­யிடும் சூழ்­நிலை உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் செல்லப் பிள்­ளை­யான சிவ­னே­ச ­துரை சந்­தி­ர­காந்தன் நான்கு வரு­டங்கள் முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்தார். இவ்­வே­ளையில் கிழக்கில் எவ்­வித பாரிய அபி­வி­ருத்­தி­களும் செய்­யப்­ப­ட­வில்லை. கூட்­ட­மைப்பை திட்­டு­வ­திலும் விடு­தலைப் புலி­களை சங்­காரம் செய்­வ­தி­லுமே காலம் கடத்­தப்­பட்­டது. விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் என்ற காரணம் கூறப்­பட்டு கிழக்­கி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளிலும் படு­கொ­லை­களே இடம்­பெற்­றன. இதை கண்டும் காணா­மலும் தெரிந்தும் தெரி­யா­மலும் நடந்து கொண்ட அரசு, கூட்­ட­மைப்பு அபி­வி­ருத்­தியில் பங்­கெ­டுத்துக் கொள்­ள­வில்­லை­யென்று கூறு­வது வேடிக்­கைக்­கு­ரிய விட­ய­மாகும். மாறாக 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்தில் இரண்­டா­வது தேர்தல் நடத்­தப்­பட்­ட­போது வடக்கு மாகாண சபைத் தேர்­தலை நடத்­தாமல் தட்டிக் கழித்து வந்­தது.

2012 இலும் கிழக்கு மாகா­ணத்தின் ஆட்சி அதி­காரம் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வசம் கைக்­கொள்­ளப்­பட்­டது. கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்சி ஆச­னத்தில் மாத்­திரம் அமர முடிந்­தது.

வட­ மா­காண சபைத் தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டித்­த­மைக்­கான காரணம் வட­ மா­காண சபை கூட்­ட­மைப்பின் வசம் போய்­விடக் கூடாது என்ற உள்­நோக்­க­மாகும். வடக்கு மாகாண சபை தேர்­தலை நடத்­தும்­படி சர்­வ­தே­சமும் இந்­தி­யாவும் கொடுத்த அழுத்தம் கார­ண­மாக கிழக்கு நடத்­தப்­பட்டு சுமார் ஐந்து வரு­டங்­க­ளுக்குப் பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­டது.

அவ்­வாறு தேர்­தலை நடத்தி மாகாண சபையை அமைத்­த­போதும் அச்­ச­பையை நிம்­ம­தி­யா­கவும் அமை­தி­யா­கவும் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் வழி­விட்­டதா என்றால் அது­வு­மில்லை. மத்­திய அர­சாங்­கத்தின் தேவை­யற்ற தலை­யீ­டுகள் ஆனைப் ­ப­சிக்கு சோளம் ­பொரி போட்­ட­து போல் நிதிப் பற்­றாக்­குறை, பிர­தம செய­லா­ள­ருக்கும் முத­ல­மைச்­ச­ருக்கும் இடை­யி­லான அதி­காரப் போட்­டி­களைத் தூண்டி விட்­டமை, முத­ல­மைச்­ச­ருக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யே­யுள்ள விரி­சலை தூண்­டி­விட்­டமை, அமைச்­சர்­களின் ஊழல் மோச­டிகள் என ஏகப்­பட்ட சங்­க­டங்­க­ளுக்குள் வட மாகாண சபையை இயங்­க­வி­டாமல் தடுத்­த­வர்கள் யார் என்­பதை கைரேகை பார்த்து கண்­டு­பி­டிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

இவ்­வா­றான நெருக்­க­டி­களும் சவால்­களும் துஷ்­பி­ர­யோ­கங்­களும் மாறி மாறி மூட்டி விடப்­பட்ட நிலையில் வட­மா­காண சபையின் அபி­வி­ருத்­தியில் கூட்­ட­மைப்பு கவனம் செலுத்­த­வில்லை. நேர­டி­யாக நாமே அபி­வி­ருத்திப் பணி­களைச் செய்­தோ­ மென பறை­ய­டிப்­பது பொருத்­த­மற்ற குற்­றச்­சாட்­டு­க­ளாகும்.

அதி­காரப் பர­வ­லாக்கல் விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்கும் கருத்­து­க­ளின்­படி அர­சாங்கம் மாகாண சபை­களை இல்­லாது ஒழிக்கப் போகி­றதா என்ற பீதி தமிழ் மக்­கள் மத்­தியில் விஸ்­வ­ரூபம் எடுத்து வரு­கி­றது.

இதில் கவ­லைப்­பட வேண்­டிய மற்றும் ஆச்­ச­ரி­யப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வென்றால் ஜனா­தி­ப­தியோ அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்கு இலங்­கையில் என்­னு­டைய ஆட்­சியில் இட­மில்­லை­யென்று அடித்­துக்­கூ­று­கிறார். பிர­த­மரோ அதி­காரப் பர­வ­லாக்­கலின் தேசிய வடி­வ­மான மாகாண சபை முறை­மையை பலப்­ப­டுத்தப் போவ­தாகக் கூறி­யி­ருக்­கிறார். உண்­மையைக் கூறப்­போனால் அர­சாங்கம் அதி­காரப் பர­வ­லாக்கல் விட­யத்தில் அல்­லது அர­சியல் தீர்வு விட­யத்தில் என்ன செய்யப் போகி­றது என்­பது யாருக்கும் புரி­யாத புதிர். இவ்­வா­றான ஓர் இருண்ட சூழ்­நி­லையில் கூட்­ட­மைப்பு பேச்சு­வார்த்­தைக்கு வர­

வி­ருப்­ப­மில்லை, அவர்­க­ளுக்கு தமிழ் மக்கள் மீது அக்­க­றை­யில்­லை­யென்­றெல்லாம் கூறு­வது முழுப் பூச­ணிக்­காயை சோற்­றுக்குள் மறைக்கும் கெட்­டித்­த­ன­மா கும். தமிழ்த் தலை­வர்­களோ அதி­காரப் பர­வ­லாக்­க­லிலேயே தமிழ் மக்­களின் தலை­விதி தங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை முழு­மை­யாக நம்பி வந்­துள்­ளனர். அதன் வழி­யி­லேயே அவர்­க­ளது அர­சியல் நட­வ­டிக்­கைகள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. ஆனால் இலங்­கையில் ஆட்­சியில் அமைந்த எந்­த­வோர் அர­சாங்­கமும் மாகாண சபையின் தற்­போ­தைய எல்­லையை விட கூடு­த­லான அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்குத் தயா­ரில்லை என்­பது வெளிப்­ப­டை­யாகவே தெரிந்­தி­ருக்கும் விட­யமாகும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்தில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சி­களின் முன்­னெ­டுப்­பாக அர­சியல் சாசனமொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான பிர­யத்­த­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­த­போதும் வெண்ணெய் திரண்டு வரும் சம­யத்தில் தாழி உடைந்த கதையைப் போல் எல்­லாமே தலைகீழ் நிலை­பெற்­றது.

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யே­யுள்ள முரண்­பா­டுகள், ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு தரப்­பி­னரின் ஆர்­வ­மின்மை, அதே­போன்றே தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வின் கட்சி சார்ந்­த­வர்­களின் முரண்­பட்ட கருத்­துகள் இழுத்­த­டிப்­புகள் அர­சியல் சாசன முயற்­சி­களைத் தூங்க வைத்­து­விட்­டன என்றே கூற ­வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­துடன் பேசி அர­சியல் தீர்­வைக் ­காண வேண்டும் என்ற விட­யத்தில் அக்­க­றை­யு­டனும் ஆர்­வத்­து­டனும் செயற்­பட்­டதன் கார­ண­மா­கவே சில பல விட்டுக் கொடுப்­பு­க­ளுக்கும் தயா­ராக இருந்­தது. அவ்­வாறு இருக்­கும்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமி­ழர்­க­ளுக்­கான தனி நாடொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான பேச்சு முயற்­சி­க­ளி­லேயே ஈடு­பட்டு வரு­கின்­றார்கள் என்று கண்­மூ­டித்­த­ன­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­பது தமிழ் மக்­களின் நீண்ட காலப் பிரச்­சி­னையை இன்னும் மழுங்­க­டிக்கும் செய­லாகும்.

பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்றி ஆறு குழுக்கள் நிய­மிக்கப்பட்டு வழிப்­ப­டுத்­தல்­ கு­ழுவில் ஆரா­யப்­பட்டு இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு கூட்­ட­மைப்பின் ஒப்­பு­தலும் ஆலோ­ச­னை­களும் பெறப்­பட்ட பின்பும் கூட யானை­யொன்று வெண்­கலக் கடையில் புகுந்­த­து போல் பிர­த­மரை மாற்றி பாரா­ளு­மன்றில் கொண்டு வரப்­பட்ட குழப்ப நிலைகள் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­பு­களை மூலையில் முடக்கி வைத்­து­விட்­டன.

மஹிந்த ராஜபக் ஷவின் இன்­னொரு எதிர் பாணம், இலங்­கையின் பெரும்­பான்மைச் சமூகம் விரும்­பாத கோரிக்­கை­களை முன்­வைத்து நாட்டைப் பிள­வு­ப­டுத்தப் பார்க்­கி­றார்கள் என்று கூறி­யுள்ளார்.

இந்­நாட்டின் பெரும்­பான்மைச் சமூ­க­மென்­பது சிங்­கள மக்கள் என்­பது சனத்­தொகை அடிப்­ப­டையில் ஏற்றுக் கொள்­வ­தற்கும் அர­சியல் உரிமை, பொரு­ளா­தார சமூக அடிப்­ப­டையில் நோக்­கப்­ப­டு­வ­தற்கும் பாரிய வித்­தி­யா­ச­முண்டு. 1505ஆம் ஆண்­டுக்கு முன் இலங்­கையின் ராஜ்­ஜி­யங்கள் இருந்த நிலைக்கும் 1948 சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள பிர­தேச சமூக நிலை­யோடு ஒப்­பீடு செய்து பெரும்­பான்மை சிறு­பான்­மை­யென்று அர்த்­தப்­ப­டுத்­து­வது யதார்த்­தத்­துக்குப் புறம்­பான விடயம்.

இந்­நாட்டில் வாழும் பெரும்­பான்மை சமூ­க­மா­கிய சிங்­கள மக்­களும் அவர்­க­ளுக்கு தலைமை தாங்­கிய தலை­மை­களும் இரு வேறு­பட்ட பார்­வையில் சமூ­கங்­களை நோக்­கி­யதன் பார­தூ­ர­மான விளைவே பெரும்­பான்மை – சிறு­பான்­மை­யென்ற கோட்­பாட்டு வாதமும் அடிப்­ப­டை­வா­தமும் உரு­வாகக் கார­ண­மா­கி­றது.

இன்­னொரு புறம் பெளத்த மேலா­திக்கம் எங்­கி­ருந்து தலை­தூக்கத் தொடங்­கி­யதோ அன்­றைய நாளி­லி­ருந்து சிறு­பான்மை இனம் என்ற ஒதுக்கு நிலை­களும் உதா­சீ­னங்­களும் இடம்­பெற ஆரம்­பித்­தன. எது எவ்­வாறு இருந்­த­போ­திலும் சிறு­பான்மைச் சமூ­கத்தின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்ற முயற்­சிகள் அர­சியல் முறையில் முன்னாள் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்கா ஏற்றுக்கொண்­டதன் கார­ண­மா­கவே பண்டா – செல்வா ஒப்­பந்தம், டட்லி – செல்வா உடன்­ப­டிக்கை, சந்­தி­ரிகா அம்­மை­யாரின் தீர்வுப் பொதி, ஐக்­கிய தேசியக் கட்சி காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு பேச்­சு­வார்த்­தைகள், இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் ஏன் 13ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் சென்று தீர்வை முன்­வைப்பேன் என்ற இன்­றைய பிர­த­மரின் வாக்­கு­று­திகள் அனைத்­துமே சிறு­பான்மை மக்­களின் தீர்­வுக்­கான அடிப்­ப­டை­க­ளாக இருந்து வந்­துள்­ளன. அவ்­வாறு இருக்­கும்­போது பெரும்­பான்மை விரும்­பாத கோரிக்­கை­க­ளையும் கோஷங்­க­ளையும் கூட்­ட­மைப்பு முன்­வைத்து நாட்டைக் குழப்பப் பார்க்­கி­றது, நாட்டை துண்­டாடப் பார்க்­கி­றது என்று கூறு­வது எவ்­வ­கை­யிலும் ஏற்றுக் கொள்­ளப்­படக் கூடிய குற்­றச்­சாட்டு அல்ல. இதன் மறு­புற அர்த்தம் யாதெனில் தமிழ் மக்கள் இந்­நாட்டில் உரி­மை­யற்­ற­வர்­க­ளாக அடிமை வாழ்வு வாழுவதையே சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் என்ற தொனிப்பொருளை வெளிப் படுத்துவதாக இருக்கிறது. இரட்டை நாக்குக் கொண்டவர்கள் பேசுவது போல் அங்கொன்று பேசுவதும் இங்கொன்று தெரிவிப்பதும் ஆட்சியாளர்களின் நேர்மையற்ற தன்மையையே எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. இவ்வாறு தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுமாக இருந்தால் எத்தனை நூற்றாண்டு சென்றாலும நாட்டில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவது என்பது எவ்வளவு கடினமான காரியமென்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான குழப்ப நிலைகளை ஏன் உருவாக்கப் பார்க்கிறார்கள் என்று பார்ப்போமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் குறிப்பாக வட,கிழக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்பது பற்றி அதிகமாக கவனத்துக்கு உட்படுத்துவதன் காரணமாகவே இத்தகைய எதிர்முனைக் கருத்துகளை ஆட்சியாளர்கள் முன்வைத்து வருகிறார்கள் என்பது நினைக்கத் தோன்றுகின்றது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் 13ஆவது திருத்தம் தொடர்பிலோ அல்லது மாற்றுத் திட்டம் தொடர்பிலோ நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மட்டும் பேசத் தயாரில்லை. பொதுத் தேர்தலின் பின் பிரதிநிதிகளாக வரும் அனைவருடனும் பேசுவதற்கே விரும்புகின்றோமென அரசாங்கத் தரப்பினர் இப்பொழுது கூறி வருகிறார்கள். இது காட்டுகின்றதென்னவென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதை மறைமுகமான இலக்காகவும் அதேவேளை, கூட்டமைப்புக்கு எதிரான அம்புகளை ஏவி விட்டு அதைச் செல்லாக் காசாக்கி மாற்று அணிகளை அடிபணிய வைக்கும் ஒரு சூழ்ச்சியையே இன்றைய ஆட்சியாளர்கள் யுக்தியாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இதை அரசியல் சாணக்கியத்துடன் கூட்டமைப்பு தெரிந்து கொள்ள வேண்டும்.

எது எவ்­வாறு இருந்­தாலும் இன்­றைய அர­சாங்கம் எதிர்­பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை சிறு­பான்­மையின் ஆத­ரவு இன்றிப் பெற முடி­யுமா? கூட்­ட­மைப்பை ஓரங்­கட்ட நினைக்கும் அர­சாங்­கத்தின் சூழ்ச்சி வெற்­றி­ய­ளிக்­குமா? கூட்­ட­மைப்பை பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­காமல் தமிழ் மக்­களின் அர­சியல் நகர்ந்து செல்­லுமா? என்­ப­தை­யெல்லாம் பொதுத் தேர்­தலின் முடி­வுகள் தெளிவாக உணர்த்தும்.

- திருமலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54