யாழ். அரச அதிபராக மகேசன் கடமைகளை பொறுப்பேற்றார்

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 01:26 PM
image

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று காலை கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்த கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக அவர் பதவி வகித்திருந்தார். 

2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக பணியாற்றினார். கென்யாவுக்கான இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவராக பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இவர் பதவி வகித்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தரத்தில் உள்ள கணபதிப்பிள்ளை மகேசன், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அமைச்சரவையின் ஒப்புதலுடன் யாழ். மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவரை வரவேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. செயலகத்திற்கு வரவேற்கப்பட்டு உத்தியோக பூர்வமாக பிரத்தியேக பதிவேட்டில் கையொப்பமிட்டார். 

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வரவேற்பு நிகழ்வில் மதத்தலைவர்களின் ஆசியும் மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையுரையும் அரசாங்க அதிபர் உரையும் இடம்பெற்றது. மாவட்ட செலயக அனைத்து அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53