கொரோனாவுக்கு சிகிச்சை : சமூக ஊடகங்களில் பரவும் கட்டுகதைகளை நிராகரித்தது உலக சுகாதார ஸ்தாபனம்

17 Feb, 2020 | 03:57 PM
image

கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பரவிவருகின்றது.

இவ் உயிர்க்கொல்லி வைரஸை எதிர்த்துப் போராட இதுவரை தடுப்பூசிகளோ அல்லது வேறு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா வைரஸுக்கான சிகிச்சை குறித்து பல கட்டுக்கதைகள் நிவவுகின்றன.

இவற்றில் பல சிகிச்சை முறைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத போதும், வெளிரச்செய்யும் இரசாயனங்களை குடிப்பது அல்லது அல்கஹோல் ஸ்ப்ரேயால் உடலைத் துடைப்பது போன்றவை ஆபத்தானவை என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. 

அத்துடன் கொரோனா  வைரஸ் சிகிச்சை தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற  10 க்கும் மேற்பட்ட கட்டுகதைகளை நிராகரித்துள்ளது.

அவை, 

01. கை உலர்த்திகள் கொரோனா வைரஸை அழிக்காது

வெறுமனே கை உலர்த்தியின் கீழ்  30 விநாடிகளுக்கு சூடான காற்றில் கைகளை உலரவிடுவதால் கொரோனா வைரஸ் அழிக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டுவருகின்றன.  

ஆனால்  அல்கஹோல் சேர்க்கப்பட்ட கைசுத்தமாக்கி  அல்லது சவர்க்காரம் மற்றும் தண்ணீர் கொண்டு முறையாக 20 நிமிடம் சுத்தம் செய்வது கட்டாயமானது எனவும் கைகள் சுத்தம் செய்யப்பட்டவுடன், காகிதம் அல்லது சூடான காற்று உலர்த்தியைப் பயன்படுத்தி அவற்றை நன்கு உலர வைக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம்  அறிவுறுத்தியுள்ளது. 

02. புற ஊதா கதிர்கள் கொரோனா வைரஸை அழிக்காது 

புற ஊதா கதிர்கள்  சருமத்தில் செலுத்தப்படும் போது அது  கிருமி நீக்கம் செய்யாது மாறாக அவை தோல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரித்துள்ளது. 

சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு உயிரணுக்களில் உள்ள டி.என்.ஏ. யை  சேதப்படுத்தும், இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். 

மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் பெரும்பாலும் நுண்ணுயிரிகளை கொல்ல புற ஊதா கதிர்கள் பயன்படுத்துகின்றன, ஆனால் அது ஒருபோதும் மனிதர்களுக்கு பயன்படுதப்படக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரித்துள்ளது. 

3. பூண்டு சாப்பிடுவது பாதுகாப்பு இல்லை

பூண்டு ஒரு ஆரோக்கியமான உணவாகும், இது சில ஆண்டிமைக்ரோபையல் பண்புகளைக் கொண்டுள்ள போதிலும் பூண்டு சாப்பிடுவது புதிய கொரோனா வைரஸிலிருந்து  பாதுகாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

4. எள் எண்ணெய் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைவதைத் தடுக்காது

எள் எண்ணெயை தோலில் தேய்த்தால் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழையாது என சமூகவளைத்தளங்களில் பரவிவரும் வதந்தியையடுத்து இது வைரஸ்  தொற்றை தடுக்காது என உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது. 

ஏனெனில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது, ஆறு அடி இடைவெளியில்  மற்றவரின் வாயிலோ அல்லது மூக்கிலோ நீர்த்துளிகள் மூலமும்  காற்றின் மூலமும்  சுவாசிக்கும்போது வைரஸ் பரவுதல் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே எள் எண்ணெயை தோலில் தேய்ப்பதால் ஒருவரால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதகாத்துக்கொள்ள முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது. 

5.  அல்கஹோல் அல்லது குளோரினை  சருமத்தில் பூசுதல் வைரஸிலிருந்து பாதுகாப்பளிக்காது

பொருட்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்களை கொல்லக்கூடிய சில சக்திவாய்ந்த இரசாயன கிருமிநாசினிகளில் ப்ளீச் மற்றும் குளோரின் சார்ந்த கிருமிநாசினிகள் அடங்கும்.

ஆனால் இவை  ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடியவை என்பதால் இதனை சருமத்தில் பூசுவதல், முகர்தல் மற்றும் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

அல்கஹோல் மற்றும் குளோரின் இரண்டும் பொருட்களின் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவை பொருத்தமான பரிந்துரைகளின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும்.' என உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

இதே வேளை விளம்பரங்களுக்கு அமைய கிருமிநாசினிகள்  தெளிப்பதால்  கொரோனா வைரஸ்ஸை கொல்ல முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

6. வெப்ப ஸ்கேனர்கள் எப்போதும் கொரொனா வைரஸ் நோய்த்தொற்றுடையவர்களை கண்டறியாது.

விமான நிலையங்கள் மற்றும் புகையிரதநிலையங்களில் வெப்ப ஸ்கேனர்கள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன. 

ஒருவரின் உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் போது  காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிய முடியும். எனினும்  கொரொனா வைரஸ்ஸை பொருத்தவரை இது சாத்தியமற்றது. 

ஏனெனில், கொரொனா வைரஸ் நோய்த்தொற்றுடையவர்களிடம் நோய் அறிகுறிகள் வெளிவர இரண்டு முதல் பத்து நாட்கள் ஆகும். எனவே புதிய வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாது,  என்று என உலக சுகாதார ஸ்தாபனம்  கூறியுள்ளது. 

7. சீனாவிலிருந்து வரும் கடிதங்கள் அல்லது பொதிகள் கொரோனா வைரஸைக் காவுவதில்லை.  

சீனாவிலிருந்து கடிதங்கள் அல்லது பொதிகளை  பெறுவதால் கொரோனா வைரஸ் தொற்றாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ்கள் பொருட்களில் மிக நீண்ட காலம் உயிர்வாழாது என்று பகுப்பாய்வு அறிக்கைகள் காட்டுகிறது. 

8. செல்லப்பிராணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை

கொவிட்-19 வுஹானில் உள்ள ஒரு உணவு சந்தையில் ஒரு விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளதாக அறியப்பட்டபோதும் தற்போதுவரை, செல்லப்பிராணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கு  எந்த ஆதாரமும் இல்லை.

சீன நாட்டவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு வைரஸ் தொற்றலாம் என அவற்றுக்கு முககவசம் அணிவிக்கின்றனர். 

இதேவேளை, சீனாவில் பல செல்லப்பிராணிகள் மிக கொடுமையாக கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடுகங்கள் தெரிவித்திருந்தன.  இத்தகைய நடவடிக்கைகள் தேவையற்றவை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், 'செல்லப்பிராணிகளை  தீண்டியதன் பின்பு கொண்ட பிறகு சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது எப்போதும் நல்லது. செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் செல்லக்கூடிய ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற பல்வேறு பொதுவான பாக்டீரியாக்களிலிருந்து இது உங்களைப் பாதுகாக்கும்  என்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

9. நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கொவிட்-19 க்கு எதிராக பாதுகாக்காது

கொவிட்-19 க்கான தடுப்பூசிகள் இன்னும் தயாராகி வருகின்றன, ஆனால் இது உருவாக்க ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம் என்று மருந்து தொழில்நுட்பம் கூறுகிறது.

இந்நிலையில், நிமோகோகல் தடுப்பூசி மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி (ஹிப்) தடுப்பூசி ஆகியவை கொவிட்-19 க்கு எதிராக வேலை செய்யாது என  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

10. மூக்கை உப்பு நீரில் கழுவுவது உங்களைப் பாதுகாக்காது

மூக்கை உப்பு நீரில் தொடர்ந்து கழுவுவது புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பளித்தமைக்கான  எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

11. மவுத்வாஷ் கொரோனா வைரஸ்ஸை கொல்லாது. 

புதிய கொரோனா வைரஸால் தொற்றுநோயிலிருந்து மவுத்வாஷ் உங்களைப் பாதுகாக்க முடியாது.

சில மவுத்வாஷ் உங்கள் வாயில் உள்ள உமிழ்நீரில் சில நிமிடங்கள்  நுண்ணுயிரிகளை அகற்றும். "இருப்பினும், கொவிட்19 நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்காது என உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04