நான் வைரஸ் இல்லை- பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக இனவெறியை சந்தித்த நபர் உருக்கமான வேண்டுகோள்

17 Feb, 2020 | 03:00 PM
image

 கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் பிரான்சில் ஆசிய நாட்டவர்களிற்கு எதிரான இனவெறி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறித்து பிரான்சில் உள்ள ஆசிய நாட்டவர்கள் சமூக ஊடகங்களில் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

நான் வைரஸ் இல்லை என்ற ஹாஸ்டாக்கினை பயன்படுத்தி தாங்கள்சந்திக்கும் நெருக்கடிகளை பிரான்சில் உள்ள ஆசிய நாட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்

பிரான்சின் கொல்மர் நகரில் வசிக்கும் கதே டிரான் என்ற பெண் தான் வேலைக்கு செல்லும்போது இருவர் தன்னை பார்த்தவுடன் கவனம் சீனா பெண்மணியொருவர் எங்களின் வழியில் வருகின்றார் என தெரிவித்ததாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நான் வேலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை என்னை கடந்து சென்ற நபர் ஒருவர் என்னை முகக்கவசத்தை அணியுமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நடந்துகொள்ளும் விதம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை அவர்கள் தங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவதற்காக கொரோனா வைரசினை பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த முறை நாங்கள் ஒருபோதும் எதிர்கொள்ளாத அளவு இனவாதம் காணப்படுகின்றது எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இருமினால் தும்மினால் நாங்கள் ஆபத்தானவர்களா என கேட்பதை நிறுத்துங்கள் என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.

லூ செங்வாங் என்பவர் டுவிட்டரில் நான் ஒரு சீன இனத்தவன் ஆனால் நான் வைரஸ் இல்லை என பதிவு செய்துள்ளார்.

அனைவரும் வைரஸ் குறித்து அச்சத்துடன் உள்ளது தெரியும் ஆனால் முற்கற்பிதங்கள் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரான்சில் உள்ள சீனர்கள் மாத்திரம் அவமானப்படுத்தப்படவில்லைஎன்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வியட்நாம் கம்போடிய பெற்றோரிற்கு பிறந்த 17 வயது சனா செங் பிரான்சில் பேருந்தில் அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாக  பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அங்கு ஒரு சீன பெண் காணப்படுகின்றார், அவர் வைரஸ் பரவச்செய்யப்போகின்றார்,அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என பயணிகள் தெரிவித்தனர் என அந்த யுவதி பதிவு செய்துள்ளார்.

அவரை பாருங்கள் ஒரு வைரஸ் போல காட்சியளிக்கின்றார் என பயணியொருவர் தெரிவித்தார் எனவும் அந்த யுவதிகுறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17