அமெ­ரிக்­காவின் பய­ணத்­த­டையும் பொறுப்­புக்­கூ­றலின் அவ­சி­யமும்

Published By: J.G.Stephan

17 Feb, 2020 | 11:21 AM
image

இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்­வா­வுக்கு அமெ­ரிக்கா விடுத்­துள்ள பயணத் தடை­யா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த விவ­காரம் தொடர்பில் அர­சாங்­கமும் எதிர்க்­கட்­சியும் தமது நிலைப்­பா­டு­களை தெளிவு­ப­டுத்­தி­யுள்­ள­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றது. 

2009ஆம் ஆண்டின் இறுதி யுத்­தத்­தின்­போது கட்­டளைப் பொறுப்­புக்­கு ­ஊ­டாக இலங்கை இரா­ணு­வத்தின் 58ஆவது படை­ய­ணி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட நீதிக்குப் புறம்­பான கொலைகள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சவேந்­தி­ர ­சில்­வாவின் தொடர்பு பற்­றிய நம்­பத்­த­குந்த தக­வல்­களின் கார­ண­மாக இலங்­கையின் தற்­போ­தைய இரா­ணுவத் தள­ப­தியும் பாது­காப்பு அதி­கா­ரி­களின் உப பிர­தா­னி­யா­கவும் உள்ள லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்­வா­வுக்கு பய­ணத்­த­டையை விதிப்­ப­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் கடந்த வெள்ளிக்­கி­ழமை அறி­விப்பு வெளியிட்­டி­ருந்­தது. 

ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்­பு­களால் ஆவ­ணப்­படுத்­தப்­பட்ட சவேந்­திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள் தீவி­ர­மா­னவை மற்றும் நம்­ப­க­மா­னவை என்றும் இரா­ஜாங்க திணைக்­களம் தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றது. 

இந்த விடயம் தொடர்பில் அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் மைக் பொம்­பியோ தனது டுவிட்டர் தளத்தில் செய்­தி­யொன்றை பதி­விட்­டி­ருந்தார். அதில் இலங்கையில் இடம்­பெற்ற உள்நாட்டு யுத்­தத்­தின்­போது முன்னெடுக்­கப்­பட்ட நீதிக்குப் புறம்­பான படு­கொ­லை­களில் சம்­பந்­தப்­பட்­டமை கார­ண­மாக சவேந்­திர சில்­வாவை அமெ­ரிக்கா­வுக்குள் நுழை­வ­தற்கு தகு­தி­யற்­ற­வ­ராக பிர­கடனம் செய்­கிறேன். போர்க்­குற்­றங்­களை இழைப்­ப­வர்கள் மற்றும் மனித உர­ிமை­களை மீறு­கின்­ற­வர்கள் விட­யத்தில் பொறுப்­புக்­கூ­றலை நிலை­நாட்டும் விட­யத்தில் அமெ­ரிக்கா பின்­நிற்­க­மாட்­டாது என்று தெரி­வித்­துள்ளார். 

அமெ­ரிக்­காவின் இந்த பய­ணத்­தடை அறி­விப்பை அர­சாங்கம் விமர்­சித்­துள்­ளது. வெளிவிவ­கார அமைச்சு இது­கு­றித்து விடுத்­துள்ள அறிக்­கையில், சவேந்­திர சில்வா மீதான தடை­யா­னது சுயா­தீன­மாக ஆரா­யப்­ப­டாத தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. இலங்கை இரா­ணுவத்தில் அவ­ரது சிரேஷ்ட நிலையை கருத்தில் கொண்டே சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார். தேசிய பாது­காப்பு தொடர்­பான முக்­கிய பத­வி­க­ளுக்கு நிரூ­பிக்­கப்­பட்ட அனு­ப­வ­முள்ள ஒரு­வரை, மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி நிய­மிப்பதை வெளிநாட்டு அர­சாங்­க­மொன்று கேள்வி கேட்­பது ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

வெளிவிவ­கார அமைச்சு இவ்­வாறு கருத்து தெரி­வித்­துள்ள நிலையில், எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும் சவேந்­திர சில்வா மீதான அமெ­ரிக்­காவின் தடை குறித்­து வருத்தம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். தனது டுவிட்டர் பக்­கத்தில் இது தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள அவர் இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா மற்றும் அவ­ரது குடும்­பத்­துக்­கு­ அ­மெரிக்கா பயணத் தடை விதித்­துள்­ளமை வருந்­தத்­தக்­க­துடன் துர­திர்ஷ்ட­வ­ச­மா­னது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்ப­தற்­கான தேசிய முயற்­சியை முன்­னெ­டுத்த வீர கள­த்­த­ள­ப­தி­களில் சவேந்­திர சில்­வாவும் ஒரு­வ­ராவார். தேவைப்­படும் இந்த நேரத்தில் நாம் அனை­வரும் அவரது குடும்­பத்­தி­ன­ருக்கு ஆத­ர­வாக நிற்­கின்றோம். ஒரு நாடு என்ற வகையில் 30 ஆண்­டு­கால பயங்­க­ர­வா­தத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைத்த போர் வீரர்­க­ளுடன் நாம் எப்­போதும் நிற்போம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் கூட்­ட­மை­ப்பின் நிலைப்­பாட்டை அறிக்­கை­யொன்றின் மூலம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். யுத்தம் முடி­வ­டை­ந்து ஒரு தசாப்­த­கா­ல­மாக பொறுப்­புக்­கூ­றலை தட்­டிக்­க­ழித்­து­வந்த இலங்கை அர­சாங்­கத்தின் கண்­களை இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா மீதான அமெ­ரிக்­காவின் பய­ணத்­தடை திறக்கும் என நாங்கள் எதி­ர­்பார்க்­கிறோம். பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் நீதிக்­காக பல வரு­டங்கள் போரா­டி­யதன் விளைவால் இடம்­பெற்ற சிறி­ய­தொரு முன்­னேற்­ற­மாக இதனை நாம் காண்­கின்றோம் என்று கூட்­ட­மைப்பின் பேச்சாளர் சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சவேந்­திர சில்வா இராணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டவேளை இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­ய­துடன் அவ­ரது நிய­ம­னத்தைக் கண்­டித்­தி­ருந்­தது. சவேந்­திர சில்வா மீதான பய­ணத்­த­டையை அடுத்­தாவது இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ர­ணை­களில் ெவளிவந்த சாட்­சி­களின் அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தற்கு இடம்­கொ­டுக்க வேண்டும் என்றும் கூட்­ட­மைப்பு தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

இரா­ணுவத் தள­ப­தி­யான சவேந்­திர சில்வா 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்­பெற்ற வேளையில் 58ஆவது பிரிவின் கட்­டளைத் தள­ப­தி­யாக செயற்­பட்­டி­ருந்தார். இவர்­மீது யுத்தக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இரா­ணுவத் தள­ப­தி­யாக இவரை நிய­மித்­த­போது இந்த விட­யங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­த­துடன் பல்­வேறு சர்­வ­தேச அமைப்­புக்­களும் கண்­ட­னங்­களை தெரி­வித்­தி­ருந்­தன.  இரா­ணுவத் தள­ப­தி­யாக சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­போது அதற்கு அமெ­ரிக்கா அதிருப்தி தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் அந்த வேளையில் இந்த விட­யங்கள் எதுவும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

சவேந்­திர சில்வா மீது தற்­போது ஏன் அமெ­ரிக்கா இந்த பய­ணத்­த­டையை விதித்­துள்­ளது என்ற கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சவேந்­திர சில்வா அமெரிக்­காவில் அமைந்­துள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் இருக்கும் இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நி­தியின் அலு­வ­ல­கத்தில் துணைத் தூது­வ­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார். 

அந்த வேளையில் இவ்­வா­றான தடை­யினை அமெ­ரிக்கா விதித்­தி­ருக்­க­வில்லை. இரா­ணுவத் தள­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வு­டன்­ இத்­த­கைய தடை­யினை அமெரிக்கா விதிக்­க­வில்லை. தற்­போது இராணுவத் தள­ப­தி­யா­க பத­வி­யேற்று ஆறு மாதங்­களின் பின்­னரே இந்தத் தடை விதிக்­கப்­ப­ட்­டி­ருக்­கின்­றது. அமெ­ரி­க்­காவின் இந்த செயற்­பாடு தொடர்பில் வெளிவிவ­கார அமைச்சும் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்­றது. 

உண்­மை­யி­லேயே இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். அந்த எதிர்­பார்ப்பு இன்னும் நீடித்து வரு­கின்­றது. யுத்தம் முடி­வு­க்கு கொண்­டு­வ­ரப்­பட்டு 11 வரு­டங்கள் கடந்­த­ுவிட்­ட­போ­திலும் இன்­ன­மும் மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் உரிய அக்­கறை செலுத்­தி­யி­ருக்­க­வில்லை.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­ுக்கு கொண்­ட­வ­ரப்­பட்ட பின்னர்  ெபாறு­ப்­புக்­கூறும் விட­யத்தில் அக்­கறை காண்­பிக்­கப்­படும் என்று அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இலங்கை வந்­தி­ருந்த அன்றைய ஐ.நா. ெசய­­லாளர் நாயகம் பான் கீ மூனுக்கு உறு­தி­ வ­ழங்­கி­யி­ருந்தார். ஆனால் அந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

இதன் கார­ண­மா­கவே 2012ஆம் ஆண்டு முதல் அமெ­ரிக்­காவின் தலை­மையில் இலங்கைக்கு எதி­ரான பிரே­ர­ணைகள் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­ற­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. 2012, 2013, 2014 ஆகிய ஆண்­டு­களில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன.  ஆனால் அன்­றைய ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அக்­கறை செலுத்­தி­யி­ருக்­க­வில்லை.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ர­ணைக்­கான பொறி­முறையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று பிேரரணை நிறைவேற்றப்பட்டது. அன்றைய அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியபோதிலும் உரிய வகையில் பொறுப்புக்கூறும் விடயம் செயற்படுத்தப்படவில்லை. கால அவகாசங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில்தான் தற்போது கோத்தபாய ராஜ

பக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றிருக்கிறது. 

இவ்வாறான சூழ்நிலையில்தான் இராணுவத் தளபதி மீதான பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. பொறுப்புக்கூறும் விடயத்தில் புதிய அரசாங்கம் அக்கறை செலுத்தவேண்டியதன் அவசியம் இதன்மூலம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. பொறுப்புக் கூறும் விடயத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய அக்கறை செலுத்தியிருந்தால் இத்தகைய தடை விதிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது. எனவே எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்தவேண்டும். இல்லையேல் இத்தகைய தடைகளும் அழுத்தங்களும் தொடரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

(17.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04