பாடசாலை மாணவனொருவன் தொலைபேசி அழைப்பில் பேசியவாறு புகையிரத தண்டவாளத்தினை கடக்க முயன்றவேளையில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கம்பஹா-மேம்பாலத்தின் அருகிலுள்ள தண்டவாளத்தில்  நேற்று இடம்பெற்றுள்ளது.

மூடிய புகையிரத பாதுகாப்பு கடவையினை மீறி  தண்டவாளத்தினூடாக கடக்க முயன்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் கம்பஹா பண்டாரநாயக்க மஹா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.