யானையோ, இத­ய­மோ­ ப­திவு செய்­யப்­பட்ட கூட்­ட­ணி­யி­லேயே தேர்­தலை சந்­திப்போம்: மனோ

Published By: J.G.Stephan

16 Feb, 2020 | 11:32 AM
image

தேர்­தலில் சின்னம், இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், "அன்­னப்­ப­றவை" யை ஏற்­றுக்­கொள்வோம். ஆனால், தேர்­தலை  பதிவு செய்­யப்­பட்ட கூட்­ட­ணி­யி­லேயே சந்­திப்போம். கூட்­டணி தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­ஸவும், கூட்­டணி தலை­மைக்­கு­ழுவில் ஐ.தே.க. பிர­தி­நி­தி­க­ளுடன் கூட்­டணி பங்­காளிக் கட்சித் தலை­வர்­களும் இடம்­பெ­றுவோம்.



கூட்­ட­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டா­ரவும், வேட்­பாளர் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­ஸவும் செயற்­ப­டு­வார்கள். இவை எங்கள் குறைந்­த­பட்ச நிலைப்­பா­டுகள். இவற்றை ஐ.தே.க செயற்­குழு ஏற்கும்  என நான் நம்­பு­கிறேன் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன்  கூறினார்.

புதிய எதி­ரணி கூட்­டணி தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்.பி மேலும் கூறி­ய­தா­வது,

பதிவு செய்­யப்­பட்ட கூட்­டணி, கூட்­டணி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, தலை­மைக்­கு­ழுவில் பங்­காளிக் கட்சித் தலை­வர்கள், பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார, வேட்­பாளர் தெரி­வுக்­குழு தலைவர் சஜித் பிரே­ம­தாஸ ஆகிய எங்கள் குறைந்­த­பட்ச நிலைப்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டா­விட்டால், சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான பெரும்­பான்மை ஐ.தே.க அணி­யி­னரும், அனைத்து பங்­காளிக் கட்­சி­களும், இணைந்து நாம் ஏற்­க­னவே பதிவு செய்து, தயார் நிலையில் வைத்­தி­ருக்கும் எமது கூட்­ட­ணியின், "இதயம்", சின்­னத்தில் பொதுத் தேர்­தலை நாம் சந்­திப்போம்.

இதில் எந்­த­வித மாற்­றுக்­க­ருத்­துக்கும் இட­மில்லை. இந்த நிலைப்­பாட்­டி­லேயே சஜித் பிரே­ம­தா­ஸவும், அனைத்து கூட்­டணி பங்­காளிக் கட்சித் தலை­வர்­களும் இருக்­கின்றோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி, கூட்­ட­ணியில் பிர­தான கட்சி. அந்த கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது. இதில் நாம் மிகவும் அக்­கறை கொண்­டி­ருக்­கிறோம். உண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பெரும்­பான்மை முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், இன்­றைய உள்­ளூ­ராட்சி மன்ற பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள், பெரும்­பான்மை கடை­நிலை உறுப்­பி­னர்கள் சஜித் அணி­யு­டன்தான் இருக்­கின்­றார்கள். நாங்­களும் அவர்­க­ளுடன் இருக்­கின்றோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது என்ற சஜித் தலை­மை­யி­லான எமது ஒட்­டு­மொத்த நல்­லெண்­ணத்தை எவரும் எமது பல­வீ­ன­மாக கருதி எம்­முடன் விளை­யாட முய­லக்­கூ­டாது. அப்­ப­டி­யான விளை­யாட்டு முயற்­சியில் எவரும் ஈடு­பட்டால், சஜித் பிரே­ம­தாஸா தலை­மை­யி­லான எமது கூட்­ட­ணியின் இதயம் சின்­னத்தில் நாம் நிச்­சயம் கள­மி­றங்­குவோம்.  அதற்­கான எல்லா ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­ய­டைந்து விட்­டன.

பதிவு செய்­யப்­பட்ட கூட்­டணி, கூட்­டணி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார, வேட்­பாளர் தெரி­வுக்­குழு தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, என்­பவை ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு எடுத்த தீர்­மா­னங்­கள்தான். இன்று இவற்­றி­லி­ருந்து பின்­வாங்­கு­வது யார் என மக்­க­ளுக்கு தெரியும். எங்­க­ளுடன் முரண்­ப­டு­கின்­ற­வர்கள் யார் என மக்­க­ளுக்கு தெரியும். ஐ.தே.க பிளவுபடுமானால், அதற்கான முழு பொறுப்பை எம்முடன் முரண்படுகின்றவர்கள்தான் ஏற்க வேண்டும். இப்படி செய்து ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய செய்து, அரசாங்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறேன்.       

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51