90 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊணுண்ணி டைனோசரின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

15 Feb, 2020 | 04:23 PM
image

90 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊணுண்ணி டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய அர்ஜென்டினா மாகாணமான ரியோ நீக்ரோ பகுதியில் வயலண்ட் பண்ணை புதைபடிவ இடத்தில் எல் குய் என்ற பீடபூமியில்  மண்டை ஓடு, பற்கள், விலா எலும்புகள், இடுப்பு மற்றும் வால் ஆகியவற்றின் துண்டுகள் உட்பட டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

புதைபடிமங்களை  கொண்டு இவ் உயிரினம் 13 அடி நீளம் உடையது எனவும்  40 அடிக்கு மேல் உயரமாக  வளரக்கூடும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவ்  ஊணுண்ணி “பயங்கர ஊர்வன” எனும் பொருளில் டைனோசர் படகோனியாவில் பொதுவான உள்ளூர் மாபுசே மொழியில் “டிரால்காசரஸ் குய்” என பெயரிடப்பட்டுள்ளது. 

இவை டைரானோசொரஸ் ரெக்ஸால்களின் வழித்தோன்றல்கள் என தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

படங்கள் Dailymail.uk

முக்கிய செய்திகள்

icon-left
icon-right