ரிஷாத்­தையும் மனை­வி­யையும் விசா­ரிக்க சி.ஐ.டி. தீர்­மானம் : நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது

15 Feb, 2020 | 01:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் மனை­விக்குச் சொந்­த­மான வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்ள  ச.தொ.ச.  நிறு­வ­னத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி மோசடி தொடர்­பான ஆவ­ணங்கள் கடந்த   52  நாள் அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தவையாகும் என்று குற்­ற­பு­ல­னாய்வு  திணைக்­க­ளம் நேற்று கல்­கிஸ்ஸை பிர­தான நீதிவான் மொஹமட் மிஹா­லுக்கு அறி­வித்­தது.

   ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அவ­ரது மனை­வி­யான கே.எம்.ஏ.ஆய்ஷா ஆகி­யோ­ரிடம் விசா­ர­ணை­களை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யினர் மன்­றுக்கு அறி­வித்­தனர்.

குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின்  பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெத­சிங்க மற்றும் குற்றப் புல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் டபிள்யூ. திலக்­க­ரத்ன ஆகி­யோ­ருக்கு, கடந்த வாரம்   ச.தொ.ச. நிலை­யத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி மோசடி தொடர்­பான ஆவ­ணங்கள் வீடொன்றில் மறைத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக  புல­னாய்வு தகவல் ஒன்று கிடைத்­துள்­ளது.   கடந்த ஏழாம் திகதி இந்த விடயம் தொடர்பில் நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு அறி­வித்து பெற்றுக் கொண்ட சோதனை உத்­த­ர­வுக்­க­மைய சோதனை நட­வ­டிக்­கை­களை சி.ஐ.டி.யினர் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதன்­போது நிதி மோசடி தொடர்­பான ஆவ­ணங்கள் மற்றும் வீட்டு உரி­மைப்­பத்­தி­ரங்கள் சிலவும் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த குற்றப் புல­னாய்வு பிரி­வினர், அந்த ஆவ­ணங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினர்.

அதற்­க­மைய  இல. 18 ஏ,கெலன்­க­டுவ, கொழும்பு -06 இல் அமைந்­துள்ள வீடொன்றை சோத­னைக்­குட்­ப­டுத்தி அங்­கி­ருந்து குறித்த சில ஆவ­ணங்­களும், 9 கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய நாணய உறு­திப்­பத்­திரம் ஒன்றும் மீட்­கப்­பட்­ட­தாக , குற்­றப்­பு­ல­னாய்வு  பிரி­வினர்  நேற்று மன்றில்  தெரி­வித்­தனர்.

குறித்த இடத்­துக்கு இந்த  ஆவ­ணங்கள்  எவ்­வாறு  வந்­தன என்­பது  தொடர்பில்  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும், இதன்­போது  இலக்கம்  143,  இசி­ப­தன  மாவத்தை,   கொழும்பு  5 ஐ   சேர்ந்த  இம்ரான்  மொஹமட்  என்­ப­வ­ருக்கு,   இலக்கம் 25  பீ,   கலே­வத்தை வீதி,  கட்­டு­கஸ்­தோட்டை  பகு­தியை  சேர்ந்த  மொஹமத் ஆரிப் என்­ப­வ­ரினால்  இந்த  ஆவ­ணங்கள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  விசா­ர­ணை­களின்  போது  தெரிய வந்­துள்­ள­தாக  குற்­றப்­பு­ல­னாய்வு  பிரி­வினர்  தெரி­வித்­தனர்.

அதற்­க­மைய ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்ட போது அது குறித்து  கைது செய்­யப்­பட்டு விளக்க  மறி­யலில்  வைக்­கப்­பட்­டுள்ள இம்ரான் மொஹம்­மட்டை  குற்­றப்­பு­ல­னாய்வு  திணைக்­க­ளத்­திற்கு அழைத்து  சென்று   வாக்­கு­மூலம்  பெற்­றுக்­கொண்­ட­தா­கவும்,  அதன்­போது மீட்­கப்­பட்ட ஆவ­ணங்­க­ளி­டையே இருந்த  நாணய உறுதிப் பத்­திரம் தொடர்பில் விசா­ர­ணை­களை  மேற்­கொண்­ட­தா­கவும்  குற்­றப்­பு­ல­னாய்வு  பிரி­வினர்  மன்றில்  கூறினர்.

 அந்த நாணய உறுதிப் பத்­திரம் ஒன்­பது  கோடி ரூபா­வையும் விட  அதிக  பெறு­ம­தி­யா­ன­தென  தெரி­வித்த சி.ஐ.டி.,அந்த  பத்­திரம்,  பெண் ஒருவருக்கு தங்க  நகை­களை  கொள்­வ­னவு  செய்­வ­தற்­காக  சந்­தே­க­நபர் இம்ரான் மொஹம்­மட்டால் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்றில் கூறினர். அப்­பத்­திரம்  ஆவ­ணங்­களின் படி 9 கோடி 35 இலட்சம் என்று உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், சந்­தேக நப­ரிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில்  தான்  9இலட்­சத்து 35 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான நாணய உறுதிப் பத்­தி­ரங்­க­ளையே வழங்­கி­ய­தாக அவர் கூறி­ய­தா­கவும் சி.ஐ.டி.யினர் நீதி­வா­னுக்கு தெரி­வித்­தனர். 

இந் நிலையில் சட்­ட­த­ரணி ஒரு­வரின் முன்­ன­லையில் இந்த நாணய உறுதிப் பத்­திரம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளமை உறு­தி­யான நிலையில் இது தொடர்பில் நீண்ட விசா­ர­ணைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர்.

 குறித்த ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்ட கொழும்பு 6 வீடு தொடர்பில் இடம்­பெற்ற மேல­திக விசா­ர­ணை­களில் அது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் மனை­விக்கு சொந்­த­மா­னது என்று தெரி­ய­வந்­த­தாக மன்றில் சுட்­டிக்­காட்­டிய சி.ஐ.டி.யினர், ஆவ­ணங்கள் அவ்­வீட்­டுக்கு எவ்­வாறு எடுத்து வரப்­பட்­டன என்­பது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறினர்.

அதற்­க­மைய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் மற்றும் அவ­ரது மனை­வி­யிடம் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர். இது தொடர்பில் விப­ர­மான மேல­திக விசா­ரணை அறிக்­கை­யையும் அவர்கள் மன்றில் சமர்ப்­பித்­தனர்.

இவ்­வி­வ­கா­ரத்தின் போது, கைது செய்­யப்­பட்­டுள்ள இம்ரான் மொஹம்மட்  கறுப்­பு­பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் 3(1) அ,ஆ சரத்தின் கீழ் குற்றம் புரிந்­துள்­ள­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்,  சந்தேக நபரின் சகோதரர் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவரிடம் சாட்சியாக கருதப்படும் நிலையில்  சந்தேக நபருக்கு பிணை வழங்கினால் சாட்சிதாரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நிலைமை இருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து சந்தேக நபர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டதரணி பிரதிவாதிக்கு பிணைவழங்குமாறு மன்றில் கேட்டுக்கொண்டப்போதும், நீதிவான் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08