கச்சதீவை மீட்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கோரிக்கை 

Published By: Priyatharshan

15 Jun, 2016 | 09:40 AM
image

இலங்கை தமி­ழர்­களின் நலன் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மற்றும் இலங்கை வச­முள்ள கச்­ச­தீவை விரைந்து மீட்க வேண்டும் என முதல்வர் ஜெய­ல­லிதா பிர­தமர் மோடி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நேற்று டில்­லிக்கு விஜயம் செய்த தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா பிர­தமர் மோடியை அவ­ரது டில்லி ரேஸ் கோர்ஸ் இல்­லத்தில் வைத்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக சந்­தித்தார். இரு தலை­வர்­களுக்கும் இடையே 50 நிமி­டங்கள் வரை நடை­பெற்ற இச்­சந்­திப்பில் தமி­ழக நலன் அடங்­கிய 29 அம்­சங்கள் கொண்ட 96 பக்­கக் கோ­ரிக்கை மனுவை முதல்வர் பிர­த­ம­ரிடம் வழங்­கினார்.

அம் மனுவில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தமி­ழக மீன­வர்கள் இலங்கை கடற்­ப­டையால் தாக்­கப்­ப­டு­வதை தடுக்க வேண்டும், தற்­போது இலங்­கை­ வசம் உள்ள 21 மீன­வர்­க­ளையும் 92 பட­கு­க­ளையும் மீட்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

கச்­ச­தீவை இலங்­கை­யி­ட­மி­ருந்து மீண்டும் இந்­தியா மீட்க வேண்டும். கச்­ச­தீவில் தற்­போது கட்­டப்­பட உள்ள அந்­தோ­னியார் தேவா­ல­யம் தமி­ழக மீன­வர்­களின் பங்­க­ளிப்­போடு அமைக்­கப்­பட வேண்டும்.

மேலும் காவி­ரியம் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்­லிக்­கட்­டுக்­கான தடையை நீக்க வேண்டும், உயர்­நீ­தி­மன்­றத்தில் தமிழை வழக்­காடு மொழி­யாக்க வேண்டும், பறக்கும் ரயி­லையும், மெட்ரோ ரயி­லையும் இணைக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி­களை விரைந்து முடிக்க வேண்டும், நதி நீர் இணைப்பை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்கவேண்டும், முல்லைப்­பெ­ரி­யாறு அணையை 152 அடி­யாக உயர்த்த நட­வ­டிக்கை எடுக்­கவேண்டும், மாநில அரசு பரிந்­துரைக்கும் இடங்­களில் எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையை அமைக்க வேண் டும், மேக­தா­துவில் அணை­கட்டும் கர்­நா­டக அரசின் முயற்­சியை தடுக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மசோ­தாவில் அ.தி.மு.க. கோரி­யுள்ள திருத்­தங்­களை ஏற்­றுக்­கொள்ள வேண்டும், உணவு தானி­யங்கள் வழங்­கு­வதை குறைக்க கூடாது, மருத்­துவ நுழை­வுத்­தேர்வை அமுல்­ப­டுத்த மாநில அரசை கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது. மீன­வர்­களை பழங்­கு­டி­யினர் பட்­டி­யலில் சேர்க்க நட­வ­டிக்க எடுக்க வேண்டும், தமி­ழக கேபிள் டிவிக்குடிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கான மண் ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக் கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் உள்ளடக்கப் பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17