சின்னம் குறித்த இறுதி முடிவு திங்கட்கிழமை - ஐ.தே.க.

Published By: Vishnu

14 Feb, 2020 | 08:57 PM
image

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான  கூட்டணியின் சின்னம் குறித்து இரு  தரப்பினருக்கும் இடையில் நிலவிய கருத்து வேறுப்பாடுகள்  ஆராயப்பட்டு 90  சதவீதம் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், திங்களன்று இறுதி தீர்வு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்  என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

புதிய  கூட்டணி தொடர்பில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும்  ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற குழு  உறுப்பினர்களுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 

இந்த  சந்திப்பினை தொடர்ந்து   ஐக்கிய தேசிய கட்சியின்    தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பும் இடம் பெற்றுள்ளது. இதன்போது பொதுத்தேர்தலில் புதிய கூட்டணியில் எச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட  வேண்டுமாயின்  புதிய கூட்டணியின் சின்னம் யானை சின்னமாக   காணப்பட வேண்டும் என  எதிர்க்கட்சி  தலைவர் சஜித்  பிரேமதாஸ  முன்வைத்த கோரிக்கையினை  ஐக்கிய தேசிய கட்சியின்   தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்தார். 

இதனை தொடர்ந்து ஏற்பட்ட  கருத்து முரண்பாடுகளினால் எதிர்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாச  கடந்த  செயற்குழு கூட்டத்தில் இருந்து  இடை நடுவே  வெளியேறினார்.

யானை  சின்னம் வேண்டுமாயின்  அனைவரும்  ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட வேண்டும் என   செயற்குழுவில்  ரணில் அணியினர் குறிப்பிட்டதை சஜித்  அணியினர் எதிர்த்தமையினால் எவ்வித தீர்மானங்களுமின்றி  கடந்த  10 ஆம் திகதி  கூடிய  ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு  முடிவடைந்தது. 

இந் நிலையில் சின்னம் தொடர்பிலான முரண்பாடுகள்   ஐக்கிய தேசிய கட்சிய  கட்சியின் ஆலோசனை குழுவினால் ஆராயப்பட்டு இன்று இறுதி  தீர்மானம்  செயற்குழுவின் ஊடாக  அறிவிக்கப்படும் என்று  குறிப்பிடப்பட்ட நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு  இன்று கூடாமல்  திங்கட்கிழமை கூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11