லண்டனில் தரை இறங்கிய விமானத்தில் கொரோனாவினால் பரபரப்பு

Published By: Vishnu

14 Feb, 2020 | 08:12 PM
image

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமானத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் விமானத்தில் பயணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக எழுந்த சந்தேகத்தினால் பயணிகள் எவரையும் விமானத்திலிருந்து தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

901 யுனைடெட் ஏர்லைன்ஸ் என்ற விமானமே இவ்வாறு சிக்கலுக்குள்ளாகியது.

விமானத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர், விமானத்தில் பின்புறத்ததில் வைத்தியப் பரிசோதனைகளுக்கா தனிமைப்படுத்தப்பட்டார்.

ஏனைய பயணிகளிடம் அவர்களது அண்மைய பயண விபரம் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ளும் விதம் தொடர்பான விண்ணப்ப படிவம் ஒன்றையும் விமான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஏனைய பயணிகள் அனைவரையும் 25 நிமிடங்களின் பின்னர் விமானத்திலிருந்து வெளியேற அனுமதியும் வழங்கப்பட்டது.

எனினும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை பிரிட்டனில் 09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் ஒரே நாளில் அங்கு 750 க்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோனைகளுக்குட்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08