மீட்டியாகொடவில் ஏற்பட்ட விபத்தில் பெண் பலி!

Published By: Vishnu

14 Feb, 2020 | 04:42 PM
image

மீட்டியாகொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொட, காலி - கொழும்பு பிரதான வீதியில் தொடகமுவ தேசிய பாடசாலைக்கு அருகில் அம்பலாங்கொடை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியிலிருந்த பெண்ணொருவரும் அவரது கணவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த பெண் கணவருடன் ஹிக்கடுவையிலிருந்து தமது வீட்டிற்கு திரும்புகையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரின் கணவர் மேலதிக சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையிலிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31