கொரோனாவை கட்டுப்படுத்த தொழில் நிறுவனங்களில் புதிய கருவி ! 

Published By: R. Kalaichelvan

14 Feb, 2020 | 05:19 PM
image

சீனாவில் இருக்கும் தொழில் நிறுவனம் ஒன்றில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் உபகரணமொன்றை தயாரித்து வைத்துள்ளனர்.

குறித்த உபரகணமானது சுரங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள் நுழைவோரின் மேனிகளில் கிருமிநானியை தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சீனாவில் மக்கள் படிப்படியாக பணிகளுக்கு திரும்பிக்கொண்டுடிருக்கும் நிலையில் இவ்வாறான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையிலேயே இவ்வாறான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் வாயிலில் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளதோடு, சென்சர் பயன்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாவும் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் பொதுமக்கள் தொழிலுக்கு அச்சத்தை விடுத்து பணிகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் புத்தாண்டை முன்னிட்டு நீடிக்கப்பட்டுள்ள விடுமுறையை தொடர்ந்தும் , கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாகவும் மக்கள் பணிகளுக்கு செல்லமால் தனது வீடுகளில் இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு பணிகளுக்கு திரும்புகின்றனர்.

அதேவளை சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 1,491 ஆக பதிவாகியுள்ளது.

மேலும்  கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 10,608 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 7,099 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33