யானை சின்னத்தை ஏற்காதவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் - ஆசுமாரசிங்க

Published By: Vishnu

14 Feb, 2020 | 03:54 PM
image

(செ.தேன்மொழி)

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், பொதுக் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யானை சின்னத்திலே போட்டியிடும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் பொதுக்கூட்டணி அமைத்து வேறு சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும் , பொதுத் தேர்தலின் போது யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்துள்ளது. இந்நிலையில் யாருடைய தேவைக்காவும் சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மாற்றம் வேண்டும் என்று எண்ணுபவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேற முடியும்.

இதேவேளை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் கொள்கைத்திட்டத்தை முழுமையாக கற்றறிந்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் கட்சியின் கொள்கைத்திட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09