உறவினர்கள், அரசியல்வாதிகளுக்காக செயற்படும் வடமாகாண கல்வி அமைச்சு : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

Published By: Daya

14 Feb, 2020 | 03:17 PM
image

உறவினர்களுக்காகவும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குச் சவால்விடும் சிலரின் நடவடிக்கைகளுக்குப் பயந்து,வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயற்படுவது கல்விப்புலத்திற்கு ஆபத்து என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஒருகாலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கையில் எந்த இனம் சார்ந்தவர்களாக இருந்தாலும் கடமைகளும், காரியங்களும் நேர்மையாகவே நடைபெற்றன.

தற்போது வடக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் தமது உற்றார், உறவினர், நண்பர்களுக்காக அனைத்து விடயங்களிலும் மிகுந்த கரிசனையுடன் தொழிற்பட்டு சகல காரியங்களிலும் பலரையும் பாதிப்படையச் செய்கின்றது வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு.

இந்நிலை தொடருமாக இருந்தால் வடக்கு மாகாணக் கல்வி வளர்ச்சியில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது எனவும், திருத்தம் வருவதற்கு வாய்ப்பே இல்லாத நிலை காணப்படுகின்றது.

மேலும் அதிபர் நியமனங்கள், அதிகாரிகளின் இடமாற்றங்கள், அதிகாரிகளின் நியமனங்கள், ஆசிரிய இடமாற்றங்கள், ஆசிரிய நியமனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு நியாயமும் மற்றையோருக்கு ஒரு நியாயமும் என்ற அடிப்படைக் கொள்கையை இறுக்கமாக வைத்துக்கொண்டு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயற்படுகின்றது. 

உயிரிழந்த ஒரு ஆசிரியருக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவை ஒரு வருடமாக இன்னும் வழங்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு மீள் நியமனம் கிடைக்கப்பெற்ற ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளோ, ஓய்வூதியமோ இன்னும் வழங்கப்படவில்லை.

கல்வி வலயங்களில் ஏற்பட்டுள்ள அதிகாரிகளின் வெற்றிடங்கள் பொருத்தமானவர்கள் இருந்தும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டிய பதவி உயர்வுகள், அவற்றுக்கான சம்பள மாற்றங்கள், சம்பள நிலுவைகள் என்பன பலநூறு ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.

பிரபல பாடசாலைகளில் பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கும் இழுபறி நிலைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. பொருத்தமில்லாமல் பாடசாலைகளுக்கு சுற்றுநிருபத்திற்கு மாறாக அதிபர்களை நியமனம் செய்து, அங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் பொருத்தமில்லாத தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

திணைக்களம் விடுகின்ற தவறுகளுக்காக ஆசிரியர்களை பலிகடாக்களாகும் செயற்பாடுகள் தொடருகின்றன. குற்றமிழைத்தார்கள் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுகின்றன. சிலருக்குச் சாதகமாகவும், சிலருக்குப் பாதகமாகவும் கண்களைமூடி தீர்வு வழங்கப்படுகின்றது. அத்தகைய விசாரணைகளுக்காகப் பல்லாயிரக்கணக்கான ரூபாக்கள் செலவு செய்யப்படுகின்றன.

பொருத்தமே இல்லாத கல்வி அதிகாரிகளை உயர் பதவிகளில் இருத்தி வைத்து ஒரு சதத்திற்குக்கூடப் பெறுமதியில்லாமல் செயற்பாடுகளை முன்னெடுப்பதும், அவர்களால் பல இடர்ப்பாடுகள் தோன்றுவதும் இன்னும் பலருக்குத் தெரியாத, எமக்குப் பல முறை தெரிந்த விடயமாக உள்ளது.

இத்தனை விடயங்களையும் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலமாகவும், வாய்மூலமாகவும் தனியாகவும், குழுவாகவும் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை.

இவை அனைத்தும் வாய்ப்புக்களை அனுபவிப்போருக்கு வாய்ப்பாகவும், ஏனையோருக்கு அருவருப்போடு, ஆத்திரத்தையும் உண்டுபண்ணுகின்றது. அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகங்கள்கூட சிலருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அதிகாரிகளுக்குச் சவால்விடும் சிலரின் நடவடிக்கைகளுக்குப் பயந்து, அரசியல்வாதிகளுக்குப்பயந்து நடுங்கும் சூழலும் தற்போது உருவாகியுள்ளது.

இவையெல்லாம் ஒட்டுமொத்த வடக்கு மாகாண மாணவர்களின் கல்வியைப் பாதிப்பதற்கு அப்பால் பலரின் சாபக்கேடுகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22