ஊவா மாகா­ணத்தில் புதிய பெயர்­களில் இயங்­க­வுள்ள 143 தமிழ் பாட­சா­லைகள்..

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 04:56 PM
image

முன்னாள் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்­ட­மானின் எண்­ணக்­க­ரு­விற்கு அமைய கடந்த வரு­டத்தில் ஊவா மாகா­ணத்தில் இயங்கும் தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு பெயர் மாற்றம் செய்யும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

பாட­சாலை அபி­வி­ருத்தி சங்­கங்­களின் அனு­ம­தி­யுடன் மாற்றம் செய்­யப்­பட்ட பாட­சா­லை­களின் பெயர்கள் 2019ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி மூலம் ஊவா மாகா­ணத்­தி­லுள்ள 143 தமிழ் மொழி பாட­சா­லை­களின் பெயர்கள் மாற்­றங்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அவ்­வாறு மாற்றம் செய்­யப்­பட்ட பெயர்­களை பாட­சா­லை­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான மேல­திக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செய­லாளர் டபிள்யூ.எம்.எம்.ஜி. அபே­சிங்க பண்டா கடிதம் மூலம் பாட­சா­லை­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

இதன் அடிப்­ப­டையில் பதுளை மாவட்­டத்தில் இயங்கும் பதுளை, விய­லுவ, பண்­டா­ரவளை, பசறை, வெலி­மடை ஆகிய கல்வி வல­யங்­களில் உள்ள 133 தமிழ் மொழி­மூல பாட­சா­லை­களும் மொன­ரா­கலை மாவட்­டத்தில் இயங்கும் மொன­ரா­கலை, பிபிலை கல்வி வல­யங்­களில் உள்ள 10தமிழ் மொழி மூல பாட­சா­லை­களும் புதிய பெயர் மாற்றம் பெற்று இயங்க உள்­ளன. இதற்கு முன்னர் பெரும்­பா­லான தமிழ் பாட­சா­லைகள் அமைந்­துள்ள ஊர் பெயர்­க­ளிலும் ஒரே ஊரில் உள்ள ஆரம்ப பாட­சா­லைகள் அதே ஊரின் பெயரில் இலக்கம் 1,2,3 என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அழைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன் கார­ண­மாக பாட­சா­லை­களில் வள பகிர்வு, அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் பல்­வேறு சிக்­கல்­களை அதி­கா­ரிகள் எதிர்­கொண்­டி­ருந்­தனர்.

இந்நிலையில் புதிய பெயர் மாற்றமானது பல்வேறு சாதக நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என கல்விமான்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48