காதல் -காமம் - இதயவலி- மாறத்தொடங்கியுள்ள சவுதி அரேபிய இளம் தலைமுறையின் வாழ்க்கைமுறை

13 Feb, 2020 | 04:38 PM
image

ஏஎவ்பீ  

ரோஜாவையும் காதலர் தினத்தை குறிக்கும் பொருட்களையும் விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் இலக்குவைத்த காலம் ஒன்று காணப்பட்டது எனினும் தற்போதுவெளிப்படையான ஆபத்தற்ற டேட்டிங் கலாச்சாரம் பரவத்தொடங்கியுள்ளது.

திருமணத்திற்கு வெளியே உறவுகளை வைத்துக்கொள்வது சவுதி அரேபியாவில் முன்னர் மரணதண்டனைக்குரிய குற்றமாக காணப்பட்டது.

எனினும் தற்போதைய தாராளமயப்படுத்தும் நடவடிக்கைகள்  மதகாவல்துறையினர் அர்த்தமற்றவர்களாக மாற்றியுள்ளதுடன்,இளம் தம்பதியினர் உணவுவிடுதிகளிலும் ஏனைய இடங்களிலும் சந்தித்துக்கொள்வது சாத்தியமாகியுள்ளது.

ரோஜாக்களை விற்பதை  போதைப்பொருட்களை விற்பதை போன்று பார்த்த காலமிருந்தது என தெரிவித்துள்ள சவுதிஅரேபியாவின் இளம் திரைப்படத்தயாரிப்பாளர்ஒருவர் ரியாத்தின் விடுதியொன்றில் தனது காதலியுடன் அமர்ந்திருந்தவாறு தெரிவித்தார். அருகில் மற்றுமொரு தம்பதியினர் காணப்பட்டனர்.

இது கூட முன்னர் நினைத்து பார்க்க முடியாத விடயமாக காணப்பட்டது என தெரிவித்த  அவர் பெண் ஒருவர் பொதுஇடத்தில் ஆண்ஒருவரிற்கு அமர்ந்திருப்பது கனவில் கூட நினைக்க முடியாத விடயமாக காணப்பட்டது எனவும் தெரிவித்தார்.

தற்போது பெண்கள் வெளியே செல்ல வருமாறு ஆண்களை அழைக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் திருமணத்திற்கு முன்னரான உறவு என்பது தற்போதும் இஸ்லாமிய பாராம்பரிய சவுதிஅரேபியாவில் ஒரு நிலக்கண்ணிவெடியாகவே காணப்படுகின்றது.

திருமணத்தை நிச்சயிப்பது குடும்பத்தின் மூத்தவர்கள் என்பதால் அனுமதிக்கப்படாத  காதல் உறவுகளை இளையவர்கள் மறைக்கின்றனர்.

சவுதிஅரேபியாவின் இரகசியமான டேட்டிங் நடவடிக்கைகள் சமூகசுதந்திரத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் இரட்டை வாழ்க்கை வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் நிதித்துறையில் பணியாற்றும் பெண்ணொருவர் தான் தனது காதலினிற்கு வழங்கிய பரிசுப்பொருட்களை காதலின் தாயார் பார்த்தததை தொடர்ந்து தனது குடும்பத்திற்கு இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவிக்கின்றார்.

எனினும் தனது காதலன் வீட்டிலிருந்து வெளியேறினார்எனவும் தற்போது வர்த்தக சுற்றுலா என்றபெயரில் தாங்கள்இருவரும் துபாய்க்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சவுதி  அரேபியா வெளிப்படையானதாக மாறிவருகின்றது ஆனால் அனைவரும் தங்கள் உறவுகள்குறித்து பொய்சொல்கின்றனர் சிலர் இது குறித்து தீர்ப்பு வழங்ககூடும் என்பதே இதற்கு காரணம் என சமிரா என தன்னை குறிப்பிடும்படி தெரிவித்த அந்த பெண் தெரிவிக்கின்றார்.

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சமூக விதிமுறைகளை தளர்த்தியுள்ளார்.

சினிமாக்கள், களியாட்ட நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

காதலர் தினத்தை எதிர்க்கும் மதகுருமாரை அவர் கட்டுப்படுத்தியுள்ளார்.

இசைநிகழ்வுகளில் ஆண்களுடன்இணைந்து பெண்கள் நடமாடுவது  சில வருடங்களிற்கு முன்னர் நினைத்து பார்க்க முடியாத விடயமாக காணப்பட்டது.

இதேவேளை மத காவலர்கள் விலகியுள்ள போதிலும், சவுதிஅரேபிய குடும்பங்களிலும் சமூகங்களிலும் காணப்படும் கண்காணிப்புகள்குறையவில்லை.

சவுதி அரேபியாவின் 20 வயது யுவதியொருவர் இராணுவத்தில்  பணிபுரியும் தனது சகோதரர் தான் ஆண்களை சந்திக்கின்றேனா என்பதை கண்காணிக்கின்றார் என சந்தேகிப்பதாக தெரிவிக்கின்றார்.

சவுதிஅரேபியாவின் இளம் தலைமுறையினர் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் சிக்குண்டுள்ளனர் என சமூக அபிவிருத்தி பிரிவில் பணியாற்றும் பெண்ணொருவர் தெரிவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right