பொதுத் தேர்தலில் யானை சின்னமே வெற்றிவாகை சூடும் : நவீன் திசாநாயக்க

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 04:11 PM
image

(செ.தேன்மொழி)

பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் செயற்குழுவின் தீர்மானமே ஏற்றுக் கொள்ளப்படும். கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது.

இதேவேளை பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டாலே வெற்றியிலக்கை அடையகூடியதாக இருக்கும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திசாநாயக்க, அவ்வாறு சின்னத்தில் மாற்றம் ஏற்படுமே என்றால் தான் போட்டியிடுவது தொடர்பில் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதவாது,

பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றது.

இந்நிலையில் யானை சின்னத்தில் போட்டியிடுவதையே பெரும்பான்மையானோர் விரும்புவதுடன், இதுவே சிறந்தது என்று நான்கருதுகின்றேன். புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் பிரசித்தி படுத்துவதைவிட அனைவரும் அறிந்திருக்கும் யானை சின்னத்தில் போட்டியிடுவதன் ஊடாகவே நாம் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற்றுக் கொள்ளமுடியும். இந்த சின்னம்தான் ஐ.தே.க.வின் அடையாளம் அதனை பாதுகாப்பது கட்சி உறுப்பினர்களின் பாரிய பொறுப்பாகும்.

சின்னம் தொடர்பான இறுதிக்கட்ட தீர்மானத்தை கட்சியின் செயற்குழுவே எடுக்க வேண்டும். எம்.பி.மார்களுக்கு இந்த விடயம் தொடர்பில் எந்தவித தீர்மானத்தையும் எடுக்க முடியாது. கட்சியன் யாப்புப்படி செயற்குழுவின் தீர்மானமே உயரியதீர்மானமாகும். பொதுக் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்துள்ள செயற்குழு சின்னம் தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02