பல நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்ட கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது கம்போடியா!

Published By: Vishnu

13 Feb, 2020 | 02:48 PM
image

பல்வேறு அரசாங்கங்களுடனான வேண்டுகோளுக்குப் பிறகு, வெஸ்டர்டாம் என்ற பயணக் கப்பல் இறுதியாக கம்போடியாவின் சிஹானுக்வில்லில் உள்ள ஒரு துறைமுத்துக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலானது கடந்த சில நாட்களில் தாய்லாந்து, தைவான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணித்தபோதும் அங்கு கப்பலை நிறுத்துவதற்கான அனுமதியானது மறுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் கப்பலில் இல்லாவிட்டாலும் ஏனைய கப்பல்களில கொரோனா தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளமையினால் அச்சம் காரணமாக இவ்வாறு கப்பலை மேற்படி நாடுகளில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் பின்னர் கப்பலில் பயணித்த பயணிகள் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரிந்ததும், இவ்வாறு கம்போடிய மண்ணில் அவர்கள் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெஸ்டர்டாம் பயணிக் கப்பலில் 802 பணியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

அமெரக்கர்கள் : 650

கனடா : 271

பிரிட்டன் : 127

நெதர்லாந்து : 91

அவுஸ்திரேலியா : 79

ஜேர்மன் : 57

சீனா மற்றும் ஹொங்கொங் : 30

ஏனைய நாடுகள் : 30

photo credit : twitter

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47