தனிச்சிங்கள அரசென்ற கோஷத்தை தவிர்த்து அனைத்து மக்களின் நலன்சார்ந்த அரசே வேண்டும்: நஸிர் அஹமட்

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 02:34 PM
image

“நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் நலன்சார்ந்த அரசை உருவாக்க வேண்டுமேயன்றி தனிச்சிங்கள அரசை உருவாக்கவேண்டும் என்ற கோஷத்தை முன்வைப்பது காலசிறந்த நடைமுறையல்ல. இந்த நாட்டில் 30வீதமான சிறுபான்மை மக்கள் வாழும் நிலையில் இவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்காது இவ்வாறான கோஷங்களை முன் வைப்பது அறிவுடைமையாகாது. இதனை இவ்வாறான கோரிக் கைகளை முன்வைக்கும் இனவாத சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்” என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

‘தனிச்சிங்கள தலைவர் கிடைத்தது போன்று தனிச்சிங்கள அரசு வேண்டும்’ என பொதுபலசேனா முன்வைத்திருக்கும் கருத்துக்குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்கூறியதாவது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட்டு சகல இனங்களும் ஒன்றிணைந்து இந்தநாட்டை சுபீட்சம்மிக்க நாடாகக் கட்டியெழுப்பவேண்டும் என்ப தே மக்களது கனவாக உள்ளது. குறிப்பாகச் சிறுபான்மை மக்கள் இதனையே பெரிதும் விரும்புகின்றனர்.

சமஉரிமையுடன் தாமும் இந்நாட்டில் கௌரவத்துடன் வாழவேண்டுமென நினைக்கும் அவர்களது எண்ணங்களை இனிமேலாவது புரிந்துகொண்டுரூபவ் இதுபோன்ற இனவாத கோஷங்களைப் புறந்தள்ளி இனங்களுக்குகிடையில் இணக்கத்தை ஏற்படுத்த பொது பலசேனா போன்ற அமைப்புகள் முன் வரவேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்து இன மக்களின் நலன்சார்ந்த அரசை உருவாக்க வேண்டு மேயன்றி தனித்த சிங்கள அரசை உருவாக்கவேண்டும் என எண்ணத் தலைப்படக் கூடாது.  அப்படியான இன ஒற்றுமைமிக்க அரசு ஏற்பாட்டால் மட்டுமே உலக அரங் கில் இலங்கையின் சிறப்பு மிகைப்படும். இன்று உலகநாடுகளை நாம் எடுத்து நோக்குவோமாயின் அவற்றில் பலரூபவ் அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர் களது எண்ணங்களை வென்று சமத்துவத்துக்கு முன்உரிமையளித்து கூட்டிணைந்த செயற்பாட்டால் அபிவிருத்திபாதையில் வெற்றி நடைபோட்டு வருவதை நாம் பார்க்கலாம்.

இந்த வகையில் இனி இந்த நாட்டில் மலரபோகும் அரசும் அணைத்து இன மக்க ளையும் அரவணைத்து அவர்களது ஆட்சியில் உரியபங்களிப்புகளை வழங்கி குறிப்பாக மூவின மக்களும் ஒன்றிணைந்து ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51