ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு

Published By: Digital Desk 4

13 Feb, 2020 | 02:13 PM
image

ஹட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இன்று 13.02.2020 விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பல ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகின.

தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள் அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.

இந்த தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன விலங்குகள் , உயிரினங்கள், உட்பட மருந்து மூலிகைகள் ஆகிய அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது வறட்சியான காலநிலை மலையகப்பகுதியில் நிலவி வருவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சமபவங்களும் அதிகரித்துள்ளன.

எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால் காட்டுப்பகுதியில் வாழும் கொடிய உயிரினங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன.

எனவே இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் செயப்படுமாரும் காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாரும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் ஹட்டன், பொகவந்தலாவ, வட்டவளை, எல்ல, கண்டி, இறம்பொடை உட்பட 7 இடங்களில் இவ்வாறு காட்டுத் தீ பரவியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11