தமிழர் பிரச்­சி­னையில் மோடியின் வேண்­டு­கோளை இலங்கை அக்­க­றை­யுடன் நோக்கும் சாத்­தி­ய­மில்லை : இந்­தி­யாவின் இரு பிர­பல தேசிய ஆங்­கில பத்­தி­ரி­கைகள் தெரிவிப்பு

13 Feb, 2020 | 01:21 PM
image

இந்­தி­யாவின் ஜம்மு - காஷ்மீர் மாநி­லத்­துக்கு இருந்த விஷேட அந்­தஸ்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் அர­சாங்கம் நீக்கி அந்த மாநி­லத்தை இரண்டு யூனியன் பிர­தே­சங்­க­ளாக தரங்­கு­றைத்து பிரித்து வைத்த செயலின் பின்­ன­ணியில் நோக்­கு­கையில், இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு கூடுதல் அதி­கா­ரங்­க­ளையும் உரி­மை­க­ளையும் வழங்­கு­மாறு அவர் வலி­யு­றுத்­து­வது வெறு­மை­யா­ன­தாகத் தோன்­று­கி­றது என்று இந்­தி­யாவின் இரு பிர­பல தேசிய ஆங்­கில பத்­தி­ரி­கைகள் நேற்று புதன்­கி­ழமை கூறி­யி­ருக்­கின்­றன.

இலங்­கையின் பிர­தமர் இந்­தி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்டு பிர­தமர் மோடி­யுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தைகள் குறித்து ஆசி­ரிய தலை­யங்­கங்­களை தீட்­டி­யி­ருக்கும் த இந்­துவும் டெக்கான் ஹெரால்டும் இலங்கைத் தமி­ழர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு விடுத்த வேண்­டுகோள் தொடர்பில் பிர­தமர் ராஜ­பக் ஷ உறு­தி­யான முறையில் பதி­ல­ளிக்­க­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டியி­ருப்­ப­துடன் இலங்கை அர­சாங்கம் மோடியின் கோரிக்­கையை பார­தூ­ர­மான அக்­க­றை­யுடன் கவ­னத்தில் எடுப்­பது சாத்­தி­ய­மில்லை என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றன.

த இந்து

'முதல் வருகை : இந்­தியா - இலங்கை உற­வுகள் குறித்து' என்ற தலைப்பில் த இந்து பத்­தி­ரிகை தீட்­டி­யி­ருக்கும் ஆசி­ரியர் தலை­யங்கம் வரு­மாறு :

இலங்­கையின் புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ பத­வி­யேற்ற பிறகு வெளி­நா­டொன்­றுக்­கான முதன் முத­லான விஜ­ய­மாக கடந்த வருடம் நவம்­ப­ரிலும் மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பிறகு முதன் முத­லாக வெளி­நாட்டுப் பய­ண­மாக கடந்த வாரமும் இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்ட விஜ­யங்கள் புதிய இலங்கை - இந்­திய அத்­தி­யா­ய­மொன்றின் தொடக்­கத்­துக்­கான நம்­பிக்­கைக்கு சமிக்ஞை காட்­டி­யி­ருக்­கின்­றது. 2015 ஜன­வ­ரியில் முடி­வுக்கு வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் முன்­னைய ஆட்சி காலத்தின் இறு­தியில்

(அப்­போது கோத்­த­பாய ராஜ­பக் ஷ பாது­காப்பு செய­லா­ள­ராகப் பதவி வகித்தார்) இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உற­வுகள் பல கார­ணி­க­ளினால் கசப்­புக்­குள்­ளா­ன­தற்கு முர­ணாக புதிய ஒரு ஆரம்­பத்தை செய்­வ­தற்கு விருப்­பங்­களைக் கொண்­டி­ருப்­ப­தாக புது­டில்­லியும் அறி­குறி காட்­டி­யது. கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு முனை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு இந்­தி­யாவும் ஜப்­பானும் கூட்­டாக முன்­வைத்­தி­ருக்கும் யோச­னைகள் உட்­பட பல அபி­வி­ருத்தி செயல்­திட்­டங்­களில் பணி­யாற்­று­வ­தற்கு இந்­தியா அக்­கறை காட்­டி­யி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் 40 கோடி டொலர்கள் கட­னு­த­வியை விரி­வு­ப­டுத்­து­வது குறித்தும் நாட­ளா­விய ரீதியில் வீட­மைப்பு திட்­டங்­க­ளுக்­கான இந்­தி­யாவின் மேல­திக உதவி குறித்தும் மஹிந்த ராஜ­பக் ஷ தனது புது­டில்லி விஜ­யத்தின்போது இந்­திய பிர­த­ம­ருடன் ஆராய்ந்தார். இலங்­கையின் வடக்­கிற்கும் கிழக்­கிற்­கு­மான விமான சேவைகள் ஏற்­க­னவே மேம்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­திற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து ஒரு விமான சேவை இடம்­பெ­று­கி­றது. மட்­டக்­க­ளப்­புக்­கான இன்­னொரு விமான சேவை குறித்தும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மஹிந்த ராஜ­பக் ஷவும் பிர­தமர் மோடியும் பாது­காப்பு விவ­கா­ரங்­களைப் பொறுத்­த­வரை, புல­னாய்வு தகவல் பரி­மாற்றம், பயிற்­சி­ய­ளிப்பு, கடந்த வருடம் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்­கு­தல்­க­ளுக்கு பிறகு இந்­தி­யா­வினால் அறி­விக்­கப்­பட்ட 5 கோடி டொலர் விஷேட கட­னு­த­வியைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றைகள் ஆகி­யவை குறித்து ஆராய்ந்­தார்கள். இந்­தி­யாவும் இலங்­கையும் மாலை­தீவும் பாது­காப்பு தொடர்­பான முத்­த­ரப்பு ஏற்­பா­டு­களை புதுப்­பிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கூட்டுக் கடல்சார் பாது­காப்பு மற்றும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு ஒத்­து­ழைப்பு ஆகி­ய­வையும் இதில் உள்­ள­டங்கும். இறு­தி­யாக ராஜ­பக் ஷ இலங்­கையின் நட்­பு­ற­வு­களைப் பொறுத்­த­வரை வர­லாறு மற்றும் கலா­சாரப் பிணைப்­புக்கள் கார­ண­மாக இந்­தி­யாவை உற­வுக்­கார நாடாக பார்ப்­ப­தாகக் கூறி­யதன் மூலம் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பிரத்­தி­யேக உற­வுகள் பற்­றிய தனது நம்­பிக்­கையை மீண்டும் வலி­யு­றுத்­தினார்.

இந்த நட்­பு­ரிமை உணர்ந்து கொள்­ளப்­படக்கூடி­யது. ஆனால் அதில் இருக்கக் கூடிய கீறல்­க­ளையும் வெளிப்­ப­டை­யாகப் பார்க்கக் கூடி­யதாய் இருக்­கின்­றது. சமத்­துவம், நீதி, சமா­தானம் மற்றும் கௌரவம் ஆகி­ய­வற்­றுக்­கான தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை இலங்கை நிறை­வேற்றும் என்றும் அரி­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் அதி­கா­ரத்தைப் பர­வ­லாக்கும் செயற்­பா­டுகள் முன்­னோக்கி நகர்த்­தப்­ப­டு­மென்றும் இந்­தியா நம்­பிக்­கை­யுடன் எதிர்­பார்ப்­ப­தாக பிர­தமர் மோடி கூறினார்.

ஆனால் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த விவ­கா­ரத்தில் எந்த உறு­திப்­பாட்­டையும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை. 13ஆவது திருத்­தத்தை தாம் விரும்­பு­வ­தா­கவும் ஆனால் பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்­திற்கு ஏற்­பு­டை­ய­தல்­லாத தீர்­வு­களைக் காணமுடி­யாது என்றும் த இந்து பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய நேர்­காணல் ஒன்றில் அவர் கூறி­யி­ருந்தார். இலங்­கையின் வடக்கு–கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு விஷேட அந்­தஸ்தை வழங்க வேண்டும் என்று இந்­தியா கொடுக்­கின்ற குரல் ஜம்மு - காஷ்­மீ­ருக்­கான விஷேட அந்­தஸ்தை நீக்­கு­வதில் மோடி அர­சாங்கம் வெளிக்­காட்­டிய உறு­தி­யான நிலைப்­பாட்­டுடன் முரண்­பா­டா­ன­தாக இருக்­கி­றது.

திரு­கோ­ண­ம­லையில் சக்தி மற்றும் உட்­கட்­ட­மைப்பு செயற்­றிட்­டங்­களில் இந்­தி­யாவின் பங்­கேற்­பையும் மத்­தள விமான நிலை­யத்தில் இந்­தியா பங்­கு­களைக் கொண்­டி­ருப்­ப­தையும் அனு­ம­திக்கும் வகையில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் கைசாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை மேற்­கொண்டு முன்­னெ­டுப்­ப­தற்கு வாய்ப்­புக்­களே இல்லை என மஹிந்த ராஜ­பக் ஷ திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்தார்.

ஆனால் இலங்கை அதன் கடன் நெருக்­க­டியை கையா­ள்­வ­தற்கு இந்­தி­யாவின் உத­வியை பிர­தமர் ராஜ­பக் ஷ கேட்­டி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­க­தாகும். இலங்­கையின் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு கடன்கள் 6000 கோடி டொலர்கள் நிலு­வை­யாக உள்­ளது. இதில் வரு­டாந்தம் சுமார் 500 கோடி டொலர்­களை மீளச் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. மூன்று வரு­டங்­க­ளுக்கு கடன் மீள செலுத்­து­கையை முடக்கி வைப்­ப­தற்கு அவர் விடுத்­தி­ருக்கும் வேண்­டு­கோளை புது­டில்லி மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும். இதற்கு இந்­தியா அளிக்கக் கூடிய பதில் நேர்­மை­யா­ன­தா­கவும் வெளிப்­ப­டை­யா­ன­தா­கவும் இருக்க வேண்டும். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்து தரு­மாறு இலங்கை முன்னர் விடுத்த வேண்­டு­கோளை புது­டில்லி ஏற்றுக் கொள்­ளா­ததால் சீனா­வுக்கு அந்த வாய்ப்பு போய்ச் சேர்ந்த கடந்த காலத்தைப் போன்று இலங்­கையின் புதிய வேண­்டு­கோளை அலட்­சியம் செய்­வதோ அல்­லது மறுப்­பதோ இரு­த­ரப்பு உற­வு­க­ளுக்கு பெரு­ம­ளவில் சேதத்தை ஏற்­ப­டுத்தக் கூடும்.

டெக்கான் ஹெரால்ட்

'இலங்­கை­யுடன் இன்­னொரு அடி முன்­னோக்கி' என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்ட் அதன் ஆசி­ரியர் தலை­யங்­கத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:

இலங்­கையின் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்ட விஜ­யத்தின் போது எந்­த­வொரு இணக்­கப்­பாடும் ஏற்­ப­ட­வில்லை அல்­லது எந்த உடன்­ப­டிக்­கை­யும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை என்­ற­போ­திலும் அந்த விஜயம் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தது. இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களைப் பொறுத்­த­வரை முன்­னா­லுள்ள பாதை குறித்து சிறந்த தெளிவை இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பேச்­சுகள் கொடுத்­தி­ருப்­பது போல் தெரி­கி­றது. கடந்த டிசம்­பரில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் விஜ­யத்தின்போது இலங்­கையின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அறி­விக்­கப்­பட்ட 40 கோடி டொலர் கட­னு­த­வி­யையும் பயங்­க­ர­வாத எதிர்ப்­புக்­கான 5 கோடி டொலர்கள் மென் கட­னு­த­வி­யையும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய வழி­மு­றைகள் குறித்து இரு நாடு­களும் ஆராய்ந்­தி­ருக்­கின்­றன.

பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஒத்­து­ழைப்பு மற்றும் புல­னாய்வுத் தகவல் பரி­மாற்றம் குறித்தும் ஆராய்ந்த இரு தரப்­பி­னரும் தங்­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்புக் கூட்டுப் பங்­காண்­மையின்  பிர­தான கவ­னக்­கு­விப்பு பாது­காப்பின் மீதா­னதே என மீளவும் வலி­யு­றுத்­தின.

இலங்­கையில் ராஜ­ப­க் ஷக்கள் அதி­கா­ரத்­திற்கு வரு­வது குறித்து இந்­தியா பெரிய விச­னத்தைக் கொண்­டி­ருந்­தது. மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால கட்­டத்தில் சீனா­வு­ட­னான இலங்­கையின் பொரு­ளா­தார, பாது­காப்பு மற்றும் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு ஆகி­யவை பெரு­ம­ள­வுக்கு வளர்ந்­தது. கடன் நெருக்­க­டிக்குள் சிக்­குப்­பட்­டி­ருக்கும் இலங்கை பாது­காப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் சீனாவின் கோரிக்­கை­க­ளுக்கு

(இந்­தி­யா­வுக்கு பாத­க­மாக அமையக் கூடிய வகையில்) இணங்க நிர்ப்­பந்­திக்­கப்­படும் என்று புது­டில்லி அஞ்­சி­யது. கொழும்பு துறை­மு­கத்தில் சீனக் கப்­பல்கள் வந்து தரித்து நிற்­ப­தற்கு இலங்கை அனு­ம­தித்த போது அத்­த­கைய அச்­சங்கள் வலு­வ­டைந்­தன. சிறி­சேன - விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வருடகால குத்­த­கைக்கு கைய­ளித்த போது இந்­தி­யாவின் பாது­காப்பு மீது இலங்­கையின் கடன்­க­ளினால் ஏற்­படக் கூடிய விளை­வுகள் அடிக்­கோ­டிட்டு காட்­டப்­பட்­டன. சீனா­வுக்கு இலங்கை செலுத்த வேண்­டிய பெரு­ம­ளவு கட­னுக்கு கைமா­றா­கவே அந்த அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா­வுக்கு பங்­கு­களை கொடுத்து ஒரு பரி­மாற்ற ஏற்­பாட்டை முன்­னைய அர­சாங்கம் செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

கடன் மீள செலுத்­து­கையை 3 வருட கால கட்­டத்­திற்கு தாம­திக்­கு­மாறு இந்­தி­யா­விடம் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ கேட்டுக் கொண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது விட­யத்தில் இந்­தியா தாராள மன­துடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்­வாறு நடந்து கொள்­வதன் மூலம் கடன் மீள செலுத்­து­கையில் இலங்கை எதிர்­நோக்கும் நெருக்­கு­தல்கள் தணியும் என்­பது மாத்­தி­ர­மல்ல, சீனாவின் அர­வ­ணைப்­பி­லி­ருந்து கொழும்பை விடு­விப்­பதை நோக்­கிய ஒரு நேர் மறை­யான நட­வ­டிக்­கை­யா­கவும் அது அமையும். கடந்த காலத்தை போன்றே இந்­தி­யாவை வர்­ணிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷ தாரா­ள­மான சொற்­களை பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இந்­தியா உற­வுக்­கார நாடென்றும் ஏனைய நாடுகள் நட்பு நாடுகள் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அவரின் இந்த வார்த்­தை­களை சீனா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் உற­வு­க­ளுக்கு மேல­தி­க­மாக இந்­தி­யா­வுக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தற்கு ராஜ­பக் ஷ அர­சாங்கம் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய எந்­த­வொரு புதிய அக்­க­றையின் அல்­லது விருப்­பத்தின் வெளிப்­பா­டாக புது­டில்லி அர்த்­தப்­ப­டுத்தி விடக்கூடாது. பாகிஸ்தானுடனான கொழும்பின் உறவுகளுடன் அருகருகாக இந்திய - இலங்கை புலனாய்வுத் தகவல் பகிர்வும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஒத்துழைப்பும் எவ்வாறு முன்னேற்றம் காண முடியும் என்பது இந்தியா தீவிரமான பரிசீலனைக்கு எடுக்க வேண்டிய ஒரு விவகாரமாகும்.

இலங்கை தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை பொறுத்தவரையில் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை மஹிந்த ராஜபக் ஷ உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக் கேட்டார். இதுவே இந்தியாவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்தியா அதன் சொந்த மாகாணங்களுக்கு வழங்கியிருக்கின்ற அளவு சுயாட்சியை மாத்திரமே இலங்கையின் தமிழ் மாகாணங்களுக்கு வழங்குமாறு சிபாரிசு செய்ய முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிலைப்பாடு அமைந்தது. காஷ்மீரியர்களுக்கு சுயாட்சியையும் அரசியல் உரிமைகளையும் மோடி அரசாங்கம் நிராகரித்திருக்கும் பின்னணியில, தமிழர் உரிமை தொடர்பான மோடியின் வலியுறுத்தல் ஒரு சாரமற்ற -  வெறுமையான ஒன்றாகவே ஒலிக்கிறது. இலங்கை அரசாங்கத்தினால் மோடியின் வலியுறுத்தல் அக்கறையுடன் நோக்கப்படக்கூடிய சாத்தியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04